முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வுகள் அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் இடம்பெற்றுள்ளது.
மே-18ம் நாள் வெள்ளிக்கிழமை சிறப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் தலைமையகத்துக்கு முன்னாள் இடம்பெற்றுள்ளது.
ஈழத்தமிழர்கள் மீது நடந்தேறிய இனப்படுகொலையினை வெளிப்படுத்தியும் தமிழர்களுடைய நியாயமான உரிமைப் போராட்டத்தினை முன்னிறுத்தியும் பேரிணியாகச் சென்று ஐ.நாவுக்கு முன்னாள் கவனயீர்ப்பு நினைவேந்தல் ஒன்றுகூடலாக அமைந்திருந்தது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் அமெரிக்க தமிழர் பொது அமைப்புக்கள் கூட்டாக இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.
நா.த.அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் சிறப்புரையோடு பல பிரதிநிதிகளது உரைகளும் இடம்பெற்றிருந்தன.
அமெரிக்க வாழ் தமிழர்கள் தமிழீழத் தேசிய துக்க நாளினை உணர்வுபூர்வமாக கடைப்பிடித்தனர்! | காணொளி இணைப்பு
பதிந்தவர்:
தம்பியன்
20 May 2012



0 Responses to அமெரிக்க வாழ் தமிழர்கள் தமிழீழத் தேசிய துக்க நாளினை உணர்வுபூர்வமாக கடைப்பிடித்தனர்! | காணொளி இணைப்பு