Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2009 ஆம் ஆண்டு நிறைவடைந்ததாகக் கருதப் படும் ஈழப் போரில் பல நூற்றுக் கணக்கான இளைஞர் யுவதிகள் காணாமற் போயிருந்தனர்.

இவர்களின் கதி குறித்து சிறிலங்கா அரசு இதுவரை வாய் திறக்கவில்லை. இந்நிலையில் 2009 தொடக்கம் இன்று வரை காணாமற் போனவர்கள் குறித்து அரசு விளக்கம் அளிக்கக் கோரி நாளை கொழும்பில் தமிழ் மக்கள் சத்தியாக்கிரகப் போராட்டம் மேற் கொள்ளவுள்ளனர்.

இப் போராட்டத்தில் ஊடகவியலாளர் 'பிரகீத் எக்நெலிகொட' கடத்தப்பட்டு 1000 நாட்களாகியும் அவர் குறித்து தகவல் எதுவும் இல்லாமையும் உள்ளடக்கப் பட்டுள்ளது. மேலும் தொலைந்து போனவர்களைக் கண்டுபிடிக்க ஐ.நா சபையின் மனித உரிமைகள் அமைப்பும் உதவ வேண்டும் எனக் கோரி கொழும்பிலுள்ள அதன் அலுவலகம் முன்பாக நாளை பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை சத்தியாக்கிரகப் போராட்டம் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது.

இதன் போது மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை ஐ.நா மனித உரிமைகள் சபையிடம் கையளிக்க உள்ளனர்.  இப் போராட்டத்தில் காணாமற் போனவர்கள் அல்லது கடத்தப் பட்டவர்களின் உறவினர்களையும் கலந்து கொள்ள அழைப்பு விடுவிக்கப் பட்டுள்ளது.

மேலும் இப்போராட்டத்தில் கடத்தப் பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப் பட்டிருப்பவர்களின் பெயர் விவரங்களை அரசு வெளியிட வேண்டும் எனவும் மேலும் இவ்விடயம் தொடர்பாக சுயமாகத் தொழிற்படும் ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறும் பொது மக்களால் வலியுறுத்தப் படவுள்ளது.

0 Responses to தொலைந்தவர்கள் கதி குறித்து மக்கள் கேள்வி - நாளை கொழும்பில் பேரணி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com