Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் திட்டமிட்ட வகையில் தொடரும் இனப்படுகொலைகளை தடுக்க இந்தியா என்ன நடவடிக்கையை எடுத்துள்ளது என்று இந்திய கம்யூனிஸக்கட்சி கேட்டுள்ளது.

இலங்கையில் இன்னமும் திட்டமிடப்பட்ட இனப்படுகொலைகள் இடம்பெற்று வருகின்றன என்று கம்யூனிஸக்கட்சியின் உறுப்பினர் டி ராஜா நேற்று ராஜ்சபாவில் குற்றம் சுமத்தினார்.

இந்துக்கோயில்கள் இலங்கையில் தாக்கப்படுகின்றன. வடக்கின் தாயகப்பூமியில் இருந்து தமிழர்களை அகற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வடக்கில் மாத்திரம் 60 வீதமான இலங்கைப்படையினர் நிலைகொண்டுள்ளனர்.

இது வடக்குகிழக்கில் வாழும் தமிழர்களில் நான்கில் ஒரு வீதமாகும்.

இந்தநிலையில் இந்த விடயங்களில் இந்தியா என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது என்று ராஜா கேள்வி எழுப்பினார்.

சர்வதேசத்தின் கோரிக்கைகளை நிராகரித்து வரும் இலங்கை அரசாங்கம் தமிழர்கள் மத்தியில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றுவதற்கும் மறுத்து வருகிறது என்று அவர் குற்றம் சுமத்தினார்.

0 Responses to திட்டமிட்டவகையில் இலங்கையில் இனப்படுகொலை தொடர்கிறது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com