Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையத்தின் ஏற்பாட்டில் 'முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப்பின்...' என்ற தலைப்பில் அரசியல் கருத்தரங்கொன்று சென்னையில் இடம்பெற்றுள்ளது.

மே18ம் நாள் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இக்கருத்தரங்கில் பேராசிரியர் தோழர் சரஸ்வதி தலைமை தாங்கினார்.

நா.த.அரசாங்கத்தின் அரசவைப் பிரதிநிதி செல்வராஜ் முருகையன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

நா.த.அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களான இந்தியப் பிரதிநிதிகளை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.

இக்கருத்தரங்கில் 'தமிழீழம் இந்திய அரசின் நிலைப்பாடும்' என்ற தலைப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் உரையாற்றினார்.

சிங்கள பௌத்த மேலாதிக்கம் என்ற தலைப்பில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக தோழர் ஹைதர் அலி உரையாற்றினார்.

மதம் கடந்த தமிழின ஒற்றுமை' என்ற தலைப்பில் இந்திய தௌஹித் ஜமாத் தலைவர் தோழர் எசு.எம்.பார்க்கர் உரையாற்றினார்.

தமிழக மீனவர்களும் இந்திய அரசும் என்ற தலைப்பில் ஊடகவியலாளர் தோழர் டி.எசு.எசு.மணி. உரையாற்றினார்.

ஈழப்போரில் பெண்கள் என்ற தலைப்பில் நா.த.அரசாங்கத்தின் அவை உறுப்பினர் வழக்குரைஞர் தோழர் பாண்டிமாதேவி உரையாற்றினார்.

நா.க.த அரசாங்கத்தின் அவை உறுப்பினர் தோழர் சுதா மற்றும் திரைப்பட இயக்குநரும் நடிகருமான தோழர் சாத்தப்பன் நன்றியுரையாற்றினர்.

0 Responses to முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின் தமிழகத்தில் தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் கருத்தரங்கம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com