Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அகில உலகிற்கு காரணகர்த்தாவாக விளங்கும் எம்பெருமான் நால்வேதங்களை தேவர்க்கும் மூவருக்கும் முனிவர்களுக்கும் உரைத்து உணர வைக்கவென தெட்ணா மூர்த்தியாக கல்லால் மரத்தின் கீழ் இளம் குருவாக வீற்றிருந்து சீடர்களுக்கு வேண்டிய உபதேசம் அருளினார். அவரது உபதேசம் இந்து சமயம் இன்று வரை மாறாது மங்காது ஒளி தந்து மக்களை நல்வழி செல்ல உறுதுணை புரிகிறது.

ஆக இறைபரம்பொருளிற்கு இணையான பெருமையைக் கொண்ட வியாழ குரு பகவான் இப்பொழுது இடப் பெயர்ச்சி அடைவதால் மனிதர்களாகிய எமக்கு பன்னிருராசிகளிலும் அவர் பார்வை எப்படி அமையப்போகிறது என்பதை குரு என்ன பலனை அளிக்கப் போகிறார் என்பதையும் சொல்ல முன்பு குருவைப் பற்றிச் சிறிது பார்க்கலாம்.

சதுர்யுகங்கள் என்று சொல்லப் படும் யுகங்கள் கிருதாயுகம், துவாபரயுகம், திரேதாயுகம் கலியுகம் எனும் நான்கு வகை உண்டு. இதில் இப்பொழுது நடந்துகொண்டிருப்பது கலியுகம் ஆகும். கலியுகத்திற்கு முந்திய திரேதாயுகத்தில் தேவர்கள் தலைவனான தேவேந்திரன் தேவலோகத்தில் தேவர்களுடன் மகிழ்ச்சியில் திளைத்து தன்நிலை மறந்து இருந்தான். அந்நேரம் தேவர்களுக்கு குருவாக இருந்த பிரகஸ்பதியாகிய வியாழபகவான் அங்கு வருகை புரிந்தார். அவர் வருவது தெரிந்து எழுந்து குருவை வணங்கி மரியாதை செய்யாது மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி இருந்தான்.

தேவர்கோன் தன்னை அலட்சியம் செய்து மதிமயக்கத்தில் இருந்ததை பார்த்த குருவானவர் அவ்விடத்தை விட்டு கோபத்துடன் வெளியேறினார். அவர் சென்றதும் அமராபதித் தலைவனின் ஐஸ்வர்யம் குறையத் தொடங்கியதோடு தேவர் உலகமும் மங்கி அதன் பெருமையை இழக்கத் தொடங்கியது. இந்திரன் மங்கையரின் ஆடல் பாடல்களில் மூழ்கி மதி இழந்து அகந்தை குடிகொள்ள குருநிந்தை செய்தான். அவனைப் பாராது வியாழகுரு மறைந்து விட்டார்.

இந்திரன் குருவை மதிக்காததால் பெரும் பாவம் சூழும் என அவரை தேடுகிறார் மன்னிப்பு கேட்க முடியவில்லை. சத்தியலோகத்தில் எங்கு தேடியும் கிடைக்காது பிரம்ம தேவரிடம் வணங்கி தன் தவறுக்கு வருந்தினான். பிரம்மனுக்கோ அவனுக்கு பெரும் பாவம் சூழ்ந்து அவஸ்தை அடையப் போகிறான் என்பது தெரியும். இந்திரனே நீ செய்த தவறால் குருவை இழந்துள்ளாய். அவரை காணும் வரை அசுர குலத்தில் மூன்று தலைகளை உடையவரும் அறிவு ஞானத்தில் சிறந்தவரும் துவஸ்டாவின் மகனுமாகிய விஸ்வருபனை குருவாக ஏற்று அவர் வழியில் செல் எனக்கூறி சென்றார்.

அதன் பின் விஸ்பரூபனை தேவர் குருவாக்கி ஒரு யாகம் செய்யும் போது அவர் தேவர்குலம் அழிந்து அசுரர் குலம் வாழவேண்டும் என யாகம் செய்வதை ஞான திருஷ்டியில் அறிந்த இந்திரன் அசுரன் விஸ்வரூபவனை அழித்தான்.

இதனால் பிரம்மஹத்தி தோஷம் அவனைப்பற்றியது. இந்திரனின் பிரம்மஹத்தி தோஷத்தை பூமியும் மரங்களும் நீரும் பெண்களும் ஏற்றுக் கொண்டதும். அவன் தோஷம் நீங்கப்பெற்றான். ஆனாலும் பழிவாங்க விஸ்வரூபனின் தந்தை துவஷ்டா கடும் கோபத்துடன் கொடிய யாகத்தை செய்து விருத்திகாசுரன் எனும் கொடிய அசுரனை இந்திரனுடன் போரிட்டு அழிக்க ஏவி விடுகிறான்.

இந்திரனும் கடும் போர் புரிந்து அசுரனை அழிக்க மீண்டும் பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொள்ள பெரும் துன்பத்தை அடைந்து அல்லுறுகின்றான். ஈற்றில் தாமரைத்தண்டில் ஒளிந்து கொண்டு தன்நிலைக்கு வருந்தினான். அவன் இல்லாமல் தேவருலகம் இருண்டு போய் இருந்தது. செய்வதறியாது திகைத்த தேவர்கள் மீண்டும் தமது தேவகுருவான வியாழபகவானை வணங்கி தேவேந்திரன் தோஷம் நீங்கி பழைய நிலைக்கு வர வழிசொல்லுமாறு இரந்து வணங்கி நின்றனர். அவரும் பூவுலகம் சென்று அங்கு உன்பாவம் போக்கி நன்நிலை அடையலாம், என்று ஆசிகூறினார்.

குருவின் சொல்லை மதித்து வணங்கி பூவுலகம் வந்த தேவேந்திரன் காசி காஞ்சி இமயமலை எங்கும் தரிசனம் செய்து கங்கையில் நீராடி புண்ணிய தலங்கள் என்று போற்றி வழிபட்டு சிவஸ்தலங்கள் எங்கும் அலைந்து திரிகிறான். அவன் தோஷம் தீரவில்லை நாளுக்குநாள் பொலிவு குறைந்து கொண்டே வந்தது. இறுதியில் கடம்பவனம் எனும் பதிக்கு அருகில் வந்து சேர்கிறான்.

அங்கு வந்ததும் அவனப்பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கி புதுப்பொலிவு பெற்றுவிடுகிறான். உடனே வியாழபகவானுக்கு தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தான். தேவகுருவும் உலகிலேயே சிறந்தபுண்ணிய தலமும் புண்ணிய தீர்த்தமும் உள்ளன அவற்றை நாம் கண்டு கொள்ளவேண்டும். அதை அறிந்து வழிபட்டு உடனே திரும்பி தேவலோகம் வந்து விடு என ஆணையிடுகிறார்.

தேவேந்திரன் கடம்பவனத்தில் அழகிய பொற்றாமரைக்குளத்தில் நீராடி மூலகாரணனாகி தானே முளைத்தெழுந்த சுயம்புலிங்கத்தைக்கண்டு பாவங்களைப் போக்கியருளிய சோமசுந்தரப் பெருமானை பலவாறு துதி செய்கிறான். மாணிக்க விமானம் அமைத்து அதை சிவனார்க்கு சாத்தி அபிஷேகம் செய்து பொற்றாமரையால் அர்ச்சித்து வழிபட சிவன் 'வேண்டும் வரம் யாது' என்கிறார்.

எப்போதும் தங்களை பூஜிக்க வேண்டும் என இந்திரன் வேண்டவும் 'ஒவ்வொரு சித்திரா பெளர்ணமி நாளிலும் நீ இங்கு வந்து பூஜிப்பாயாக, வருடம் முழுதும் பூஜை செய்த பலன் கிடைக்கும்', என்று ஆசிர்வதித்து தேவருலகம் சென்று சகல இன்பங்களையும் பெற்று வாழ்வாயாக. என வாழ்த்தினார்.

தேவர் மனிதர் இப்படி தலைமைபதவியில் இருப்பவர் முதல் சாதரண மானிடர் வரை எவாராயினும் கிரக பாதிப்புகள் அவர்கள் மீது தமது தாக்கத்தை ஏற்படுத்திச் செல்கின்றன. அவ்வேளை நாம் எமது கடமையிலிருந்து வழுவாது குருவை நிந்திக்காது, எல்லாமும் எப்போதூம் கிடைக்க அருள்தரும் இறைவனை மறவாது வழிபட்டால் இத்துன்பங்களில் இருந்து விடுபட இறைவழிகாட்டுவார். ஆகவே குருபெயர்சி பன்னிருராசியினருக்கும் எப்படி பலன்தருவார் அவர் பார்வை எமக்கு எப்படி நன்மை செய்யப்போகிறது எனப் பார்போம்.

வைகாசி மாதம் நான்காம் நாள் 17.05.2012 அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி அடைகிறார். அவர்

மேஷம்: மேஷ ராசியினருக்கு 2ம் இடத்தில் பெயர்வடைந்து அதிக நன்மைகள் தர்ப்போகிறார் தொழில்மேன்மை பணவரவு அதிகரிக்கும். திருமணம்கைகூடி வர உதவுவார்.

ரிஷபம்: ரிஷப ராசியினருக்கு 1ம் இடத்தில் பெயர்வடைந்து ஜன்மகுரு வாக இருந்து செலவுகளும்தொழில்பின்னடைவுகளும் காரியத்தடைகளும் ஏற்படுத்தப்போகிறார்.

மிதுனம்: மிதுன ராசியினருக்கு 12ம் இடத்தில் பெயர்வடைவதால் அதிக சிரமமும் அலைச்சலும் கடின உழைப்பும் குழப்பமான சூழலையும் உருவாக்கப்போகிறார்.

கடகம்: கடகம் ராசினருக்கு 11ம் இடத்தில் பெயர்வடைவதால் புதிய சொத்துச் சேர்க்கை தொழில் அனுகூலம் செல்வாக்கு திருமணயோகம் கைகூடி வர வழி வகுப்பார்.

சிம்மம்: சிம்ம ராசியினருக்கு 10ம் இடத்தில் பெயர்வடைவதால் நன்மையும் சிரமும் கலந்த பலனும் வாழ்வில் மாற்றங்களும் தொழிலில் போட்டிகளை ஏற்படுத்தி மேன்மைகள் அளிப்பார்.

கன்னி: கன்னி ராசியினருக்கு 9ம் இடத்தில் பெயர்வடைவதால் சொத்து சேர்க்கை தொழில் வளர்ச்சி முயற்சிகள் அனுகூலம் காரியங்களை கைகூட வழிகாட்டுவார்.

துலாம்: துலா ராசியினருக்கு 8ம் இடத்தில் பெயர்வடைவதால் அட்டமக்குருவாக இருந்து எக்காரியத்திலும் எச்சரிக்கையாகவும் பணிச்சுமைகளோடு குறைந்த வருமானம்செலவுகளை ஏற்படுத்தப்போகிறார்.

விருச்சிகம்: விருச்சிக ராசியினருக்கு 7ம் இடத்தில் பெயர்வடைவதால் தொழில் திறமையுடன் சமாளிக்கும் ஆற்றலோடு வருமானத்தையும் தரப்போகிறார்.

தனுசு: தனு ராசியினருக்கு 6ம் இடத்தில் பெயர்வடைவதால் சங்கடகுரு நன்மை தீமை கலந்த பலன் கூடுதலான முயற்சியும் ஊக்கமும் ஏற்படுத்தி தொழிலில் முன்னேற்றத்திற்கு வழிவகுத்திடுவார்.

மகரம்: மகர ராசியினருக்கு 5ம் இடத்தில் பெயர்வடைவதால் பணியில் ஆர்வம் ஊதிய உயர்வு விற்பனைத்திறன் அதிகரிக்கச் செய்து அற்புதமான பலன் தரப்போகிறார்.

கும்பம்: கும்ப ராசியினருக்கு 4ம் இடத்தில்பெயர்வடைவதால் அர்த்தாஸ்டம குரு சிரமமான பலன் சஞ்சலமான வாழ்வில் சிலகுறுக்கீடுகளும் செலவுகளும் அதிகரிக்கச் செய்வார்.

மீனம்: மீன ராசியினருக்கு 3ம் இடத்தில்பெயர்வடைவதால் அனுகூலங்கள் குறைந்த பலன்கள் மன உளைச்சல் ஆர்வக்குறைவு அதிக செலவுகள் என்று தரப்போகிறார்.

தேவர் தலைவனாக: இருந்தாலும் அரச பதவி ஏற்றிருந்தாலும் சாதாரண தலைமைப் பதவி என்று வாழ்ந்திருந்தாலும் எம்மை ஆட்கொள்ளும் சக்தியும் ஆட்டி வைப்பதும் எமக்கு மேலான தெய்வம் அன்றி வேறு இல்லை. அத்தெய்வம் மனிதர் தம்மை உணர்ந்து கொள்ளவும் தமக்கு அறிவு ஊட்டி நல்வழி காட்டும் குருவை நிந்தை செய்யாது அவரது நல்வழியில் செல்லவும் ஆறறிவு தந்து இம் மண்ணில் நன்கு வாழ அனுப்பி பிறப்பிக்கிறார்.

ஆனால் நாம் சரியான முறையில் வாழ்கிறோமா இல்லை ஆகையால் நவகிரகங்கள் தாக்கம் பூமிக்கு கிடைக்கச் செய்து மனிதர்களுக்கு கிரகங்களின் பாதிப்பு எப்படி என அறிய செய்து நாம் வாழ்க்கையை உணர வைக்கிறார்.ஆக அரசதலைமைப் பதவியானாலும் தொழிலில் தலைமைப் பதவியானாலும் குடும்பத்தலைமைப் பதவியானாலும் அமைப்புகளின் தலைமைப்பதவியானாலும் அதை வழி நடத்த ஒரு குரு தேவை.

தலைமைப் பதவி என்பது அதை நிர்வகிப்பது என்பது அவ்வளவு இலகுவான காரியமில்லை. சரியான நேரத்தில் சரியான முடிவுகளையும் எவரையும் மதிக்கும் வண்ணம் எந்நேரத்திலும் பணிவாகவும் சாதுர்யமாகவும் பதவிப் பொறுப்புக்களை நிர்வகிக்கும் போது குருவின் பார்வையில் பதிவார். இறை அனுக்கிரகமும் கிடைக்கப் பெறுவர் என்பது ஜோதிட ரீதியான நம்பிக்கை.

Gurupeyarchi Pothu Palangal 2012 / 17-05-2012 / காணொளி இணைப்பு

4தமிழ்மீடியா

0 Responses to குரு மாற்றம் | பலன்கள் | குருவின் பார்வையில் | வியாழ மாற்றப் பலன்களுடன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com