2009ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் வைத்து சிறிலங்காவின் அரச படைகளால் கொல்லப்பட்டவர்களின் ஆத்ம சாந்திக்கான மகா யாகம் ரொறன்ரோவில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் நேற்று இடம்பெற்றது.
நாடுகடந்த அரசு மற்றும் ஏனைய தமிழ் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த யாகத்தில் பல மதகுருமார்கள் கலந்து கொண்டு ஆத்மசாந்திக்கான மகா யாகத்தை நடத்தினர்.
முள்ளிவாய்க்காலில் பலியானவர்களிற்கான நினைவாலயத்தை கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைத்து வணக்க நிகழ்வுகளை நடத்தி வரும் நாடு கடந்த அரசு, மே மாதம் 18ஆம் திகதியன்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு ரொறன்ரோ குயின்ஸ் பார்க் சட்டசபையின் முன்னால் துக்க நிகழ்வுக்களை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்விற்கு கனடாவிலுள்ள முக்கிய அமைப்புக்கள் தமது ஆதரவை வழங்கி நிற்கின்றன.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் பலியானவர்களின் ஆத்மசாந்திக்கான மகாயாகம் | காணொளி இணைப்பு
பதிந்தவர்:
ஈழப்பிரியா
14 May 2012
முள்ளிவாய்க்கால் ம்ட்டுமல்ல;இனபோராட்டத்தில்;சிங்களவெறியர்களின் இன அழிப்பில் உயிர் நீந்த அனைவருக்கும் ஆத்ம சாந்தியைக் கொடுக்கக்கூடியது சுதந்திர தமிழீழம் மட்டுமே; யாககுண்டமல்ல