மனிதநேயத்துக்கெதிரான மாபெரும் இனப்படுகொலையை மேற்கொண்ட போர்க் குற்றவாளி மகிந்த இராஜபக்சஆற்றவிருக்கும் உரையினை நிறுத்தக்கோரியும் பொதுநலவாய அமைப்பின் மனிதாபிமானத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடைபெறவிருக்கும் இச்செயலைக் கண்டித்தும் யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பினர் ஐரோப்பியவாழ் தமிழ்ப்பெண்களுக்கு ஒர்அவசரமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்கள்.
தமிழின அழிப்பை மேற்கொண்டு போர்க்குற்றம் புரிந்த மகிந்த இராஜபக்சவை பிரித்தானிய மாகாராணியின் வைரவிழாவிற்கு அழைத்திருப்பது தமிழ்மக்களின் மனதைப் புண்படுத்தும் செயற்பாடு எனவும், போர்க்குற்றம் புரிந்து தமிழ்மக்களை கண்மூடித்தனமாக படுகொலை செய்த மகிந்த இராஜபக்ச லண்டன் மண்ணில் காலடிவைப்பதை ஒருபோதும் அனுமதிக் கூடாது எனவும் , பிரித்தானிய அரசு முடிசூடிய அறுபதாவதுவருட நிறைவுவிழாவை களங்கம் சூழப்போகின்றது என்ற வகையில் இந்த விழாவுக்கு மாபெரும் போர்க்குற்றவாளியை அழைத்திருப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கவேண்டிய விடயமா பிரித்தானிய, ஐரோப்பிய புலம்பெயர் மக்கள் அனைவரும் யூன் மாதம் 6 ஆம் நாள் காலை 9:00 மணிக்கு லண்டன் மான்சன் கவுசுக்கு முன்னால் அணிதிரளுமாறு அன்புடன் வேண்டப்படுகின்றார்கள் .
இலட்சக்கணக்கான தமிழ்மக்களை கொன்று குவித்து தமிழ்ப்பிரதேசங்களில் இன்றும் இராணுவ ஆட்சியை நடாத்திவரும் மகிந்த இராஜபக்ச இந்த விழாவில் கலந்துகொள்வது உலகமானுட பண்புகளுக்கும் மனித உரிமைகளுக்கும் மாபெரும் அவமானம் ஆகும்.. அத்துடன் பாரம்பரியமிக்க பிரித்தானிய ஆட்சிக்கும் கொலைகாரன் மாபெரும் போக்குற்றவாளியின் வருகை மிகப்பெரிய களங்கத்தையும் வரலாற்று அவமானத்தையும் எற்படுத்திவிடும்.
மனித உரிமைகளையும் சர்வதேச சட்டங்களையும் காலில் போட்டுமிதித்து அதன் மேல் ஏறி நின்று தமிழ்ப்பெண்களை பாலியல் கொடுமைபுரிந்து படுகொலை செய்த கொலையாளியை ஐரோப்பிய மண்ணில் காலடிமிதிக்க அனுமதிக்க கூடாது அத்தோடு நாங்கள் விழிப்புடன் போராட வேண்டும் எனவும் ஐரோப்பிய வாழ்தமிழ்பெண்களுக்கு யேர்மன் தமிழ்ப்பெண்கள் அமைப்பினர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
சர்வதேசஅரங்கில் சிங்கள அரசின் இனப்படுகொலையை அம்பலப்படுத்தி இராஐபக்ச சகோதரர்களின் போர்க்குற்றத்தினை வெளிக்கொண்டுவந்து சர்வதேசநீதிமன்றத்தில் தண்டனைக்குள்ளாக்குவது நமது கடமையல்லவா. நாங்கள் எல்லோரும்ஒன்றுதிரண்டு போராடவேண்டும். அன்பான தமிழ் உறவுகளே, சகோதரிகளே விழித்திருங்கள் எதிரியை விரட்டியடிக்க நாமெல்லாம் ஒன்றுதிரள்வோம் .காலத்தின் தேவையையறிந்து உணர்வுடன் ஒன்றுகூடுங்கள் லண்டன் வாழ் உறவுகளுக்கு கைகொடுங்கள்.. தொடரும் போராட்டத்தில் எதிரிக்கு கிடைக்கவிருக்கும் அங்கீகிகாரத்தை இல்லாமல் செய்வோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தகவல்: தமிழ்ப்பெண்கள் அமைப்பு – யேர்மனி
0 Responses to ஐரோப்பிய வாழ் தமிழ்ப்பெண்களுக்கு! அவசரமான வேண்டுகோள்...