Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரிட்டன் வரும் இராசபக்சேவை வீரத்துடன் விரட்டியக்க வேண்டும்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

வரும் 06.06.2012 அன்று இலண்டனில் பொதுநல ஆயநாடுகளின் வர்த்தக மாநாடு நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்ள, இலங்கைத் தடியரசுத் தலைவரும், மனிதகுலப் பகைவனுமான இராசபக்சே இலண்டன் வருகிறார்.

கடந்த 2010ஆம் ஆண்டு ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்த இராசபக்சேவை, ஹீத்துரு விமான நிலையத்தை விட்டு இறங்க விடாத அளவிற்கு, வீரத்துடன் போராடிய பிரித்தானிய தமிழ் மக்களுக்கு, தற்போது மீண்டும் அதே போன்று இராசபக்சேவை விரட்டியக்கும் நல்வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

2008-2009இல் தமிழீழ மண்ணில் 1இலட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளியான இராசபக்சேவுக்கு,பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் தண்டனை வாங்கித் தரும் வரை உலகத் தமிழர்கள் ஓயக்கூடாது. இராசபக்சேவுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என நம்பும் வகையில், அண்மையில் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த லைபிரீய முன்னாள் அதிபர் சார்லஸ் டைலர் என்ற கொடுங்கோலனுக்கு 50 ஆண்டுகள் வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த மார்ச் மாத்தில், ஐ.நா. மனித உரிமை அவையில், இராசபக்சேவின் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க வேண்டுமென பல்வேறு நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளன. உலக நாடுகள் மத்தியிலும், மனித நேய மற்றம் சனநாயக சக்திகள் மத்தியிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இராசபக்சேவை, இலண்டனில் விரட்டியடித்து பிரித்தானிய புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் வரலாறு படைக்க வேண்டும். அவர் விரட்டியடிக்கப்படும் போது, ஈழத்தமிழினப் படுகொலையை உலகம் மேலும் கூர்ந்து கவனிக்கும். உலகம் உரிய நடவடிக்கை எடுக்கும்.

எனவே, வரும் சூன்-6 அன்று பிரிட்டன் வரும் இராசபக்சேவை,பிரித்தானியத் தமிழ் மக்கள் வீரத்துடன் விரட்டியடிக்க வேண்டும் என உரிமையோடும், உறவோடும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள,

பெ.மணியரசன்,

இடம்: சென்னை
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

0 Responses to பிரிட்டன் வரும் இராசபக்சேவை வீரத்துடன் விரட்டியக்க வேண்டும்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com