புதுக்கோட்டை இடைத்தேர்தல் தொகுதிக்குள்பட்ட கறம்பக்குடி ஒன்றியம் களபம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தை தொடக்கி வைத்து அவர் பேசினார்.
அப்போது அவர், ‘’விஜயகாந்தின் ஆலோசனைப்படி கடந்த மக்களவைத் தேர்தலை தமிழகத்தில் அனைத் து கட்சியும் போட்டியிடாமல் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம்.
ஆனால், அதற்கு தமிழகத்தில் எந்தக் கட்சியும் முன்வரவில்லை. கடந்த திமுக ஆட்சியில் அதிமுக 5 இடைத்தேர்தலை புறக்கணித்தது.
தற்போதைய அதிமுக ஆட்சியில் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் டெபாசிட் தொகையை இழந்ததால் புதுக்கோட்டை இடைத்தேர்தலை போட்டியிட திமுக புறக்கணித்தள்ளது. அதேபோல், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் புறக்கணித்துள்ளன.
இந்நிலையில் கட்சி தொடங்கியதில் இருந்து அனைத்து தேர்தல்களையும் சந்திக்கும் கட்சியாக தேமுதிக மட்டுமே திகழ்கிறது. இது மறைந்த முத்துக்குமரனுக்காக நடக்கு்ம இடைத்தேர்தல். அவர் சார்ந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டிருந்தால் தேமுதிக அவர்களை ஆதரித்திருக்கும்.
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதற்கு மத்திய அரசை குறைகூறும் தமிழக முதல்வர், தமிழகத்தில் மக்களின் நிலையை உணர்ந்து பேசவேண்டு்ம். ஆட்சிப்பொறுப்பேற்று சில மாதங் களிலேயே எளிய மக்களைக்கூட பாதிக்கும் வகையில் பேருந்து, மின்கட்டணம் மற்றும் பால் விலை யை கடுமையாக உயர்த்தியுள்ளது.
நல்லது செய்திருந்தால் மக்களே ஆட்சியாளர்களை பாராட்டுவார்கள். அதிகரித்துள்ள மின்தடை, வேலைவாய்ப்பு இன்மையால் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது. ஆனால், நூறாண்டு சாதனையை ஓராண்டில் செய்துவிட்டோமென தன்னைத்தானே மக்கள் பணத்தில் விளம்பரப்படுத்துக்கொள்கிறது அதிமுகஅரசு. தன்னைத்தானே பாராட்டிக்கொள்ளக்கூடாது. இது நூறாண்டு சாதனைஅல்ல நூறாண்டு வேதனைதான்.
விலையில்லா பொருள்களைக் கொடுப்பவர்கள் மின்சாரம் கொடுக்கவில்லை. அரிசி கொடுக்கிறார்கள் வேலை கொடுக்கவில்லை. மக்களுக்கு கொடுத்ததைவிட மக்களிடம் இருந்து பறித்துக் கொண்ட துதான் அதிகம். இதுதான் தமிழகத்தின் ஆட்சி.
விவசாயத்தையே பிரத்யேமாக கொண்டுள்ள தமிழகத்தில் விவசாயம் செழித்தால் வ்அனைத்து துறையும் செழித்துவிடு்ம். ஆனால், தமிழகத்தில் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள் விவசாயிகள்.
கடந்த திமுக ஆட்சியில் கொலைசெய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆலங்குடி அ. வெங்கடாசலம், அதிமுக ஆட்சி வந்தும் கூடஉண்மைக்குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதேபோல், அதிமுக ஆட்சியில் திமுக பிரமுகர் திருச்சி ராமஜெயம் கொலையில் எந்த துருப்பும் கூட இதுவரை கிடைக்கவில்லை.
ஆனால், போலீஸ் தேடிக்கொண்டிருக்கிறதாம். அந்தஅளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. அண்டைமாநில கொலை, கொள்ளையர்களெல்லாம் தமிழகத்தில் பிரவேசித்து தங்கள் கைவரிசையை காட்டிவருகின்றனர். இதுவரை இந்த பக்கம் வராத அமைச்சர்களெல்லாம் இப்போது வந்துள்ளார்கள்.
தேர்தல் முடிந்ததும் போய்விடுவார்கள். ஆனால், விஜயகாந்த் மக்களோடே இருப்பார். புதுக்கோட் டையில் ஏற்படும் மாற்றம் சென்னை ஜார்ச் கோட்டையில் எதிரொலிக்க வேண்டும். தமிழகத்தில் நிர்வாகத்திறமையற்ற ஆட்சி நடக்கிறதுஎன்பதை நிரூபிக்க வேண்டும்.
தேதிமுக ஆட்சிக்கு வந்தால் நதிகளை இணைத்து தண்ணீர் பிரச்னை அடியோடு தீர்க்கப்படும். மேலும், சொந்த செலவில்10 லாரிகளில் குடிநீர் இலவசமாகஅளிக்கப்படும். இதேபோல் கல்வி, சுகாதாரத்துக்கு முன்னரிமை அளிக்கப்படும்.சட்டம் ஒழுங்கு சீராகும்’’ என்று கூறினார்.
செம்பருத்தி
இது நூறாண்டு சாதனைஅல்ல நூறாண்டு வேதனைதான் | பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
பதிந்தவர்:
ஈழப்பிரியா
04 June 2012
0 Responses to இது நூறாண்டு சாதனைஅல்ல நூறாண்டு வேதனைதான் | பிரேமலதா விஜயகாந்த் பேச்சு