Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் இனப் படுகொலையாளி மகிந்த இன்று இரவு பிரித்தானியா வந்தடைவார் என்ற தகவலை அடுத்து ஈழத் தமிழர்கள் ஹீத்ரோ விமான நிலையத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துகின்றனர்.

பிரித்தானிய வாழ் தமிழீழ மக்கள் ஹீத்ரோ விமான நிலையத்தை முற்றுகையிட்டு மகிந்தக்கு எதிரான கோசங்களை எழுப்பி தமிழின உணர்வுகளுடன் புலிக்கொடிகளையும் கைகளில் தாங்கியவாறு மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை தொடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஏனைய பயணிகளுக்கு அசெளகரியங்கள் ஏற்படாதவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இடத்தில் வழமையை விட கூடுதலான பொலிஸார் நிற்பாட்டப்பட்டுள்ளார்கள்.

தொடர்ந்து பெய்துகொண்டிருக்கும் குளிர் மழையையும் பொருட்படுத்தாது, இனக்கொலை வெறியன் மஹிந்தவை லண்டனுக்குள் காலடி வைக்க விடாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு வலுச்சேர்க்க எல்லா தமிழ் உறவுகளையும் அணிதிரண்டு வருமாறு அமைப்புக்கள் வேண்டுகின்றன.

2010 இல் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற பிரித்தானியா வந்த மஹிந்தவுக்கு எப்படியான நெருக்கடிகளைக் கொடுத்து உரையாற்றாமல் அவமானப்படுத்தி திருப்பி இலங்கைக்கு அனுப்பப்பட்டதோ அதே போன்று இம்முறையும் இராணியின் முடிசூட்டி வைரவிழாவிலும் கலந்துகொள்ளாமல் தடுத்து மீண்டும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆகவே அனைத்து தமிழ் உறவுகளும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு வலுச்சேர்க்குமாறு தமிழ் அமைப்புக்கள் கேட்டுக்கொள்கின்றன.

இனப்படுகொலையாளி மஹிந்தவின் வருகையினை எதிர்த்து நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டங்களில் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வுபூர்வமாக வந்து கலந்துகொள்ளுமாறு அனைத்து பிரித்தானிய தமிழர் அமைப்புக்களும் கோரி நிற்கின்றன.



மகிந்தரை விரட்ட ஒன்று கூடிய பிரித்தானியத் தமிழர்கள்



போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச லண்டன் வருகின்றார் என்ற தகவலையடுத்து கீத்துறூ விமான நிலையத்தில பெருந்திரளான தமிழ் மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரித்தானிய காவற்துறையினர் மக்கள் கூடுவதை தடுப்பதற்காக எடுத்த முயற்சிகளையும் தாண்டி மக்கள் Terminal 4 இல் தேசியக்கொடிகளை கையில் ஏந்தியவாறு "Sri Lanka President War Criminal" என்ற கோசத்துடன் தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தினர்.

மகிந்த ராஜபக்ச இலண்டனுக்குள் வந்துவிட்டாரா என்பதை உறுதியாக அறிந்திருக்காத மக்கள் இனியும் அவரின் வருகை தெரியவரும் பட்சத்தில் தவறாது அங்கு வந்து அவர் நாடு திரும்பும் வரை அவர் செல்லுமிடமெல்லாம் சென்று எமது எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்று உறுதியாகக்கூறி தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று எழுச்சியாக 3 தடவைகள் உரத்த குரலில் உறுதியெடுத்துக்கொண்டு விமான நிலையத்தை விட்டு கலைந்து சென்றனர்.

0 Responses to மஹிந்த இலண்டன் வருகை: ஈழத் தமிழர்கள் ஹீத்ரோ விமான நிலையத்தில் முற்றுகை | காணொளி இணைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com