தமிழகம், சென்னைப் பெருநகரின் ஜவஹர் நகரில் உள்ள அங்காடியொன்றுக்கு முன்னால், இலங்கைத் தயாரிப்பு பொருட்களைப் புறக்கணிக்க கோரும் விழிப்பூட்டல் பரப்புரை போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை தயாரிப்பு பொருட்களை புறக்கணியுங்கள் என்ற முழக்கத்துடன், குறித்த அங்காடிக்கு முன்னால், வாடிக்கையாளர்களை நோக்கி துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இராஜ்குமார் பழனிச்சாமி அவர்கள் பல வாடிக்கையாளர்களுக்கு எது சிறிலங்கா தயாரிப்புகள் என்றே தெரியவில்லை.
அதனால் அவர்களுக்கு இலங்கை தயாரிப்பு பிஸ்கட், இனிப்புகள், கேக்குகள் முதலியவற்றை அடையாளம் காட்டினோம் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமொன்றில், இலங்கை அரசு மீது பொருளாதார தடையினைக் கொண்டுவருமாறு, இந்திய மத்திய அரசினை, தமிழக அரசு கடந்தாண்டு கோரியிருந்தது.
இலங்கைப் பொருட்களை புறக்கணிக்க கோரும் விழிப்பூட்டல் போராட்டங்கள், சென்னையின் பல இடங்களில் ஏலவே இடம்பெற்றுள்ளன.
இனப்படுகொலை செய்த இலங்கை அரசினைப் புறக்கணிப்போம் என முதன்மை முழக்கத்துடன், இலங்கையின் பொருட்கள், துடுப்பெடுத்தாட்டம், விமானசேவை, பரிவர்த்தனைகள், உல்லாசத்துறை ஆகியனவற்றைப் புறக்கணிக்குமாறு, இந்த விழிப்பூட்டல் பரப்புரையினை மேற்கொள்பவர்களின் கோரிக்கையாகவுள்ளது.
இலங்கை தயாரிப்பு பொருட்களை புறக்கணியுங்கள் : சென்னையில் தீவிர விழிப்பூட்டல் பரப்புரை!
பதிந்தவர்:
ஈழப்பிரியா
09 June 2012



we appreciate the tamils from Tamil nadu but at the same time i hate the tamils from SRILANKA who always buy the products of Srilanka.How many times you ask them,they will never listen.Even though there are better products than from srilanka,they are not worried.Most of the business establishments run by srilankans import products like biscuits, alcohol(mendis special),Stout etc. As far as i am concerned i do not buy any products from Srilanka. I earnestly ask my brothers and sisters to boycott these products.After viewing all the war crime photos published recently,do you like to help the racial regime?