லண்டன் ஒலிம்பிக்கில் இன்றைய ஐந்தாம் நாள் போட்டிகளின் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டிகளில் இந்தியாவின் காஷ்யப் பருப்பள்ளி (Kashyap) மீண்டும் அசத்தல் வெற்றி பெற்றிருக்கிறார்.
அவர் இன்று வியட்நாமின் முதல் ஐந்து நிலைகளுக்குள் திகழும் வீரரான என்குயென் தியெனுடன் இரண்டாவது போட்டியில் மோதினார். இதன் போது, அவர் 21-9, 21-14 என நேரடி செட் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் புலேலே கோபி சாண்டுக்கு அடுத்து முன்னணி வீரர்களை வீழ்த்திய முதல் இந்திய பேட்மிண்டன் வீரராக காஷ்யப் புகழப்படுகிறார்.
25 வயதான காஷியப் இப்போட்டியில் அசத்தல் வெற்றி பெற்றிருப்பது இந்திய ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.



0 Responses to ஆடவர் பேட்மிண்டனில் இந்தியாவின் காஷ்யப் மீண்டும் வெற்றி