Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மேற்கு ஆப்பிரிக்க நாடான குயினேயா இல் (Guinea) வேகமாகப் பரவி வரும் எபோலா (Ebola) என்ற தொற்றுக் காய்ச்சலால் குறைந்தது 59 பேர் வரை பலியாகியிருப்பதாக யுனிசெஃப் (UNICEF) அறிவித்துள்ளது.

மேலும் இரத்த இழப்பை ஏற்படுத்தும் இந்த hemorrhagic வகை இந்த ஆட்கொல்லித் தொற்றுக் காய்ச்சல் குயினேயாவின் தெற்கே வாழ்ந்து வரும் சமூகத்தினரிடையே வேகமாகப் பரவி வருவதாகவும் எச்சரிக்கப் பட்டுள்ளது.

இந்தத் தொற்றுக் காய்ச்சல் வேகமாகப் பரவ விடாமல் தடுக்க முன்னரே இதனை இனங்காண முடியவில்லை என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நோயின் அறிகுறிகளாக வயிற்றுப் போக்கு, வாந்தி மற்றும் காய்ச்சல் ஆகியவை தென்படும் எனவும் கூறப்படுகின்றது. மேலும் எபோலா தொற்றுக் காய்ச்சல் முற்றிய நிலையில் நமது உடலில் உள்ள பல உள்ளுறுப்புக்கள் செயல் இழக்கும் எனவும் அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் யுனிசெஃப் அமைப்பின் கூற்றுப் படி குயினேயா இல் இந்த நோய் முற்றியிருப்பதாக உறுதிப் படுத்திய 80 பேரில் 59 பேர் மரணத்தைத் தழுவியுள்ளனர் என உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. இதில் மூவர் சிறுவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை மிகப் பலவீனமான மருத்துவக் கட்டமைப்பு உடைய நாடான குயினேயா இல் இந்த எபோலா தொற்றுக் காய்ச்சலின் பாதிப்புப் பாரதூரமானது எனவும் பிற நாடுகளின் மருத்துவ உதவியின்றி இதனைக் கட்டுப்படுத்த அந்நாட்டுக்கு சிரமமான பணி எனவும் கூறப்படுகின்றது.

0 Responses to மேற்கு ஆப்பிரிக்க நாடான குயினேயா இல் வேகமாகப் பரவி வரும் எபோலா தொற்றுக் காய்ச்சல்: 59 பேர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com