திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
172 கோடி ரூபாய் செலவில் அண்ணா நூற்றாண்டு நூலகம் எழுந்தபோது முதலமைச்சராக இருந்த நான் பலமுறை அங்கு சென்று, அமைதியான சூழலில் அனைவரும் அமர்ந்து படிக்க ஆலோசனைகளை வழங்கினேன். அந்த அருமையான கட்டிடத்திற்குள், திருமண விருந்திற்கு வந்தவர்கள் சாப்பிட்ட பிறகு வெளியே வீசப்பட்டிருந்த எச்சில் இலைகளின் குவியல்களைக் கண்டு
இதயம் புண்ணாகிறது இரத்தக் கண்ணீர் வடித்தேன்.
எப்படிப்பட்டவர்கள் இப்போது ஆட்சிக் கட்டிலில் ஏறியிருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்த்து மனம் புழுங்கினேன். அண்ணாவின் நினைவாக தெற்காசியாவிலேயே மிகப்பெரிய அளவிற்கு தமிழகத்தைச் சேர்ந்த வருங்கால மாணவர்கள், எதிர்கால சந்ததியினர் பயன்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கோடு திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது. நான் திறந்து வைத்த காரணத்திற்காக ஜெயலலிதா அந்த இடத்தை மருத்துவமனையாக மாற்றப்போவதாக அறிவித்தார்.
நீதிமன்ற தீர்ப்பால் அந்த அறிவிப்பு அமலாகாமல் இருந்தாலும், அந்த நூலகத்தை எந்த அளவிற்கு மாசுபடுத்த முடியுமோ, அதற்கான ஏற்பாடுகளில் அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால் மனதிற்கோர் ஆறுதலாக தமிழ்நாட்டு ஏடுகள் எல்லாம் அதிமுக ஆட்சியின் இச்செயலை விமர்சித்துள்ளனர். ஆனால் இந்த ஆட்சியினர் அதைப்பற்றியெல்லாம் கவலை படுகிறவர்களாகத் தெரியவில்லை. இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.
Poda sotta ni per vanga thana kattuna athan kedu da en dupuku