Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாலியல், அடிதடி, மிரட்டல், மோசடி என பல பிரச்சனைகளிலும் நித்தியானந்தா சிக்கிக்கொண்டுள்ளார். கர்நாடகா காவல்துறை நித்தியை சிறைக்குள் தள்ள ஆதாரங்களை நீதிமன்றத்தில் தந்துள்ளது. அதில் இருந்து தப்பிக்க கர்நாடகாவில் உள்ள தனது பீடதி ஆஸ்ரமத்துக்கே போகாமல் மதுரையில் தங்கியுள்ளார்.

தமிழக அரசும் பாதுகாப்பாக உள்ளதால் கொடைக்கானல் சென்று ஓய்வு எடுத்தவர் தற்போது பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அவரது ஆஸ்ரமத்துக்கு சீடர்கள் படையுடன் வந்துள்ளார்.

எப்போதும் பௌர்ணமியன்று இரவு கல்பதர் என்ற பெயரில் சத்சங்கம் நடத்தும் நித்தியானந்தா இந்த முறை பகலிலேயே தொடங்கிவிட்டார்.

இன்று காலை 10 மணிக்கே மேடையில் அமர்ந்து பேச தொடங்கிவிட்டார். கிரிவலம் வரும் பக்தர்களை தனது பக்தர்கள் என அவரது சிஷ்யர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.

இதுப்பற்றி அவரது சிஷ்யர்களிடம் கேட்டபோது, சுவாமி பல சிக்கல்களில் உள்ளார்.

அதில் இருந்து விடுபடவும், எதிரிகளை அழிக்கவும் இன்று இரவு ஆஸ்ரமத்தில் பெரியதாக யாகம் நடத்த சுவாமி முடிவு செய்துள்ளார். அதனாலயே பகலில் சத்சங்கம் நடத்தினார் என்றார்கள்.

0 Responses to எதிரிகளை அழிக்க நித்தியானந்தா நடத்தும் யாகம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com