Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய பேட்மிட்டன் வீராங்கணை சாய்னா நேவால், இந்திய விமானப்படை விமானத்தில் பறந்து, விமானப் படையின் கவுரவத்தை பெற்றுக் கொண்டார்.

சமீபத்தில் லண்டனில் நடைப் பெற்ற ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்றார். இதை கௌரவிக்கும் விதத்தில்,  இன்று ஹைதராபாத்தில் உள்ள இந்திய விமானப் படையின், புதிய போர் விமானத்தில் விமானப்படை வீரர்களுடன் சிறிது நேரம்  பறந்தார்.
இந்த அனுபவம், தனக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது என்றும், மனதில் மகிழ்ச்சி சிறகடித்துப் பறந்ததாகவும் கூறியுள்ள சாய்னா, மேலும் சாதிக்க தூண்டும் விதமாக உடன் வந்த இநதிய விமானப்படை  வீரர்களின் உற்ச்சாகம் அமைந்து இருந்ததாகவும் கூறினார்.

    இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், தோனி இவர்களுக்கு பிறகு பேட்மிட்டன் வீராங்கணை சாய்னா நேவால்தான்  அடுத்து போர் விமானத்தில் பறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

     போர் விமானத்தில் சாய்னா நேவால் பறந்தது தங்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக, விமானப்படையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.  

0 Responses to விமானப் படை விமானத்தில் பறந்தார் சாய்னா நேவால்: இந்திய அரசு கௌரவம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com