இஸ்லாமியர்களை புண்படுத்தும் விதத்தில் அண்மையில் வெளிவந்த Innocence of
Muslims திரைப்படத்தை தயாரித்த நபரை, கலிபோர்னியாவில் காவல்துறையினர் கைது
செய்துள்ளனர்.
பஸ்ஸெல்லி நகுலா எனும் 55 வயதுடைய இந்நபர் நேற்று கைது செய்யப்பட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் சமஷ்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிமன்றம் அவருக்கு பிணைவழங்க மறுத்துள்ளது. உலகளாவிய ரீதியில் கலகலங்களை தூண்டிவிடும் விதத்தில் நடந்துகொண்டமைக்காகவும், அனுமதி பெறாது, இணையத்தில் இப்படத்தை பதிவேற்றம் செய்து வெளியிட்ட குற்றத்திற்காகவும், இவருக்கு பிணை வழங்க முடியாது என நீதிபதி கூறியிருப்பதுடன் சமூகத்திற்கு ஆபத்தான விடயத்தை இவர் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நகுலா படம் தயாரிக்க வங்கி நிதி மோசடி செய்ததாக ஏற்கனவே சிறை சென்றிருந்த அவர் 2011 இல் விடுதலை ஆகியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் கலிபோர்னியாவில் உருவாக்கியிருந்த, 13 நிமிட வீடியோ திரைப்படம் Innocence of Muslims எனும் பெயரில் இணையத்தில் வெளிவந்தது.
இஸ்லாமியர்களையும், முகம்மது நபி அவர்களையும் அவமரியாதை செய்யும் வகையில் இத்திரைப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், இத்திரைப்படம் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டதன் பின்னணியில் அமெரிக்க சூழலே இருப்பதால் அமெரிக்காவுக்கு எதிராகவும் மத்திய கிழக்கு நாடுகளில் கடுமையான போராட்டம் வெடித்திருந்ததுடன் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. இதன்போது லிபியாவுக்கான அமெரிக்க தூதுவர் உட்பட நான்கு அமெரிக்கர்களும் 20 க்கு மேற்பட்டவர்களும் கொல்லப்பட்டிருந்தனர்.
கடந்த இரு வாரங்களாக பொதுமக்கள் பார்வையிலிருந்து மறைந்து வாழ்ந்த நகுலா தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது உயிருக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக நகுலாவின் வழக்கறிஞர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள மெட்ரோபோலிடன் தடுப்பு மையம் அதிகமான இஸ்லாமியர்கள் வாழும் இடம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நகுலாவை படுகொலை செய்பவருக்கு 100,000 அமெரிக்க டாலர் வழங்கப்படும் என பாகிஸ்தானின் ரயில்வே துறை அமைச்சர் குலாம் அஹ்மத் பிலோர் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to இஸ்லாமியர்களுக்கு எதிரான படத்தை தயாரித்தவர் கைது: பிணை வழங்கவும் மறுப்பு