Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒபாமாவை இஸ்லாமியராக விமர்சித்தமைக்கு பிரபல பாப் பாடகி மடோனா மன்னிப்பு கோரியுள்ளார்.
மேடையில் நான் உணர்ச்சிவசப்பட்டு முரணாக கூறிவிட்டேன். ஒபாமா இஸ்லாமியர் அல்ல என்பது எனக்கு தெரியும். எனினும் பல அமெரிக்கர்கள் அவரை இஸ்லாமியராக தான் கருதுகிறார்கள். அவர் யார் இருந்தால் என்ன?, நான் சொல்ல வந்தது நல்ல மனிதர் நல்ல மனிதர் தான். அவர் யாரை வணங்குகிறார் என்பது முக்கியமல்ல. ஒபாமா எந்த மதத்தை சேர்ந்தவர் என்பது எனக்கு முக்கியமல்ல.  அது அமெரிக்காவில் யாருக்கும் முக்கியமல்ல என அவர் கூறியுள்ளார்.

முன்னதாக வாஷிங்டனில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் மடோனா மேடையில் கருத்து தெரிவிக்கையில் 'வெள்ளை மாளிகையில் கறுப்பு இஸ்லாமியர் ஒருவர் உள்ளார். அவர் அனைவரது உரிமைகளுக்காகவும் போராடுகிறார்.  ஓரின சேர்க்கையளர்களின் உரிமைகளுக்காகவும் போராடுகிறார். எனவே அவரை ஆதரிப்போம்' என்றார்.  மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்த முறையும் ஒபாமா ஜெயித்தால், வெள்ளை மாளிகையில் பிறந்த மேனியுடன் நடனமாடுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே பல மேடை இசை நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்களை வம்புக்கு இழுத்து அடிக்கடி சர்ச்சைக்குள்ளாக்கிய பின்னர் மன்னிப்பு கேட்வது மடோனாவின் வழக்கம்.  கடந்த ஜூலை மாதம் பிரான்ஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் பிரான்ஸின் வலது சாரி தேசிய முன்னணி கட்சியின் தலைவர் மரின் லோ பென்னின் முகத்தில் ஸ்வஸ்டிகா சின்னம் தெரிவது போன்று வடிவமைத்து மேடையில் காட்சிப்படுத்தியதால் கடும் அதிருப்திக்கு உள்ளாகியிருந்தார்.

0 Responses to ஒபாமா வெள்ளை மாளிகையில் உள்ள 'கறுப்பு இஸ்லாமியர்': பாப் பாடகி மடோனா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com