ஈரானியத் தொலைக்காட்சியான Press TV யின் ஊடகவியலாளர் மாயா நசீர்,
சிரியாவில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். டமஸ்காஸிலிருந்து
தொலைக்காட்சி
சேவைக்கு நேரலை செய்தி வழங்கிக்கொண்டிருந்த போது நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டார். இக் கொலைக்கு அமரிக்க ஆதரவுப் படைகளான சிரிய கிளர்ச்சிப்படைகள்ளே பொறுப்பு என Press Tv குற்றம் சுமத்தியுள்ளது.
மேற்குலக ஊடகவியலாளர்கள் உயிரச்சுறுத்தலுக்கு உள்ளானால், போட்டி போட்டி அவற்றை வெளிக்கொணரும் ஊடகங்கள், நசீரின் மரணம் தொடர்பில் மௌனம் காப்பது ஏனோ என அதிருப்தியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
டமஸ்கஸில் இரட்டை குண்டுவெடிப்பை படம்பிடித்துக்கொண்டிருந்த போது ஸ்னைப்பர் தாக்குத மூலம் இவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 33 வயதான மாயாவின் படுகொலைக்கு பிரஸ் டீவி கடும் கண்டனம் விடுத்துள்ளதுடன், சவுதி அரேபியா, கட்டார், துருக்கி போன்றன டமஸ்காஸில் கிளர்ச்சி படைகளுக்கு நேரடியாக ஆயுதங்களை வழங்கி, பொதுமக்கள், இராணுவத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களை படுகொலை செய்யுமாறு அறிவுறுத்துவதாக குற்றம் சும்த்தியுள்ளது.
மேலும் இதே போன்று அமரிக்கா ஈராக் மீதான தாக்குதலின் போதும் ஸ்னைப்பர் துப்பாக்கிகளை வழங்கி பொதுமக்களை கொல்லுமாறு உத்தரவிட்டது. தற்போது சிரியாவிலும் தொடர்கிறது. யதார்த்த நிலையை படம்பிடிக்க முற்படும் ஊடகவியலாளர்களுக்கும், சாதாரண பொதுமக்களுக்கும் உயிராபத்து பயத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறான படுகொலைகளை செய்கிறது. எனினும் இதனால் எம்மை ஒரு நாளும் கட்டிப்போட முடியாது. நாம் தொடர்ந்து களத்தில் நிற்போம். உண்மை நிலையை படம்பிடிப்போம் என்கிறார் Press Tv யின் செய்திப்பிரிவுக்கு பொறுப்பான ஹமீத் ரசாட் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஈரான் ஊடகவியலாளர் சிரியாவில் படுகொலை : பின்னணியில் மேற்குலகம்?