Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தல்வர் ஜெயலலிதா,   நாட்டில் தற்போதுள்ள முக்கிய பிரச்னைகளில் திமுக தலைவர்  இரட்டை வேடம்போடுவதாக கூறியதற்கு திமுக தலைவர் கலைஞர் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’ இரட்டை நிலையை எப்போதும் கடைப் பிடிப்பவர் யார் என்பது; தமிழ்நாட்டு மக்களுக்கே தெரியும். அதற்கு சான்றாக, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்று பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார்.

சில நாட்களுக் கெல்லாம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டுமென்று பேரவையில் இவரே தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றினார்.

ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், சசிகலா மீது யாராவது குறை கூற முற்படுவார்களேயானால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிவிட்டு,

27-8-1996 தேதிய அறிக்கையில் சிகலாவோடு எனக்கு இருந்த தொடர்புகள் அனைத்தையும் இந்த நாள் முதல் விலக்கிக் கொள்கிறேன் என்றும் அறிவித்து விட்டு, மீண்டும் ஒரு முறை அவரை ஒன்று சேர்த்துக் கொண்ட..... இதற்குப் பெயர் இரட்டை நிலையா? நிலையி ல்லாத நிலையா?
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போதிலும், காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட கருணா நிதியால் கூட்டச் செய்ய இயலவில்லை” என்று ஜெயலலிதா அறிக்கையிலே கூறுகிறார். இந்தக் காவிரி நதி நீர் ஆணையம் அமையக் காரணமாக இருந்ததே நான்தான்! ஆனால் அந்த ஆணையம் பற்றி இதே ஜெயலலிதா என்னவெல்லாம் சொன்னார் தெரியுமா?
காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டு, 11-8-1998 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
21-8-1998 அன்று ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், “உத்தரவிடுவதற்கும், செயல்படுத்து வதற்கும் போதிய அதிகாரம் உள்ள அமைப்புக்குத்தான் ஆணையம் என்று பெயர்.
ஆனால் பிரதமர் தலைமையிலான ஆணையத்துக்கு காவிரி தொடர்பாக உத்தரவிடுவதற்கும், செயல்படுத்துவதற்கும் எந்த அதிகாரமும் இல்லை. காவிரிப் பிரச்சினையைத் தீர்க்க இயலாத, எந்த முடிவும் எடுக்க விடாமல் தடுக்கிற விவாத அமைப்பாகத்தான் இப்புதிய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்துக்குச் சிறிதும் பாதிப்பில்லை; பாதிக்கப்படப் போவது தமிழகம்தான்” என்று சொன்னார்.

காவிரி நதி நீர் ஆணையத்தின் முதல் கூட்டம் 28-10-1998 அன்றும், 14-7-2000 அன்றும் டெல்லியில் நடைபெற்றது.  நான் முதலமைச்சராக இருந்த போது கூட்டமும் நடைபெற்று, அதில் தமிழகத்திற்கு இவ்வாறு பலனும் ஏற்பட்டதற்கு ஜெயலலிதா என்ன பதில் சொல்லப் போகிறார்?

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைய உறுப்பினர் வேணுகோபால் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, “வள்ளூர், வடசென்னை, மேட்டூர் ஆகிய இடங்களில் மின் உற்பத்தித் திட்டம் மூலம் அடுத்த ஆறு மாதங்களில் 3000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்” என்று சொல்லியிருக்கிறார்.
 

இந்த 3000 மெகாவாட் மின்சாரம், தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் மூலமாகத்தான் கிடைக்கவுள்ளது என்பதைப் புரிந்து கொண்டால்; கழக ஆட்சியில் மின் உற்பத்திக்காக எதுவும் செய்யவில்லை என்று திரும்பத் திரும்ப கூற மாட்டார்கள்’’ என்று  கூறியுள்ளார்.

0 Responses to இதற்குப் பெயர் இரட்டை நிலையா? நிலையில்லாத நிலையா?: கலைஞர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com