Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை தேனாம்பேட்டை போபஸ் ரோடு, 2-வது தெருவைச் சேர்ந்தவர் ஆர்த்திராவ். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 26-ந்தேதி மாலை 4 மணி அளவில் நாங்கள் வசிக்கும் வீட்டு காம்பவுண்டில் தந்தையின் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது ஒரு மனிதன் காரின் அருகில் வந்து சந்தேகப்படும் வகையில் ஏதோ செய்து கொண்டு இருந்தார். இதை கவனித்த எனது தாய் அவரிடம் வந்து என்ன செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவர் வேறு ஒருவரை பார்க்க வந்தேன் என்று கூறியவாறு செல்போனில் பேசிக்கொண்டே சென்று விட்டார். அதன் பிறகு அன்று இரவு 7 1/2 மணிக்கு ஒருவர் வந்து விட்டு காலிங்பெல்லை அழுத்தினார்.

அம்மா கதவை திறந்து விசாரித்தபோது, செந்தில் இருக்கிறாரா? என்று கேட்டிருக்கிறார். அப்படி யாரும் இல்லையே என்று அம்மா சொன்னதால் தெரியாமல் வந்து விட்டேன் என்று அந்த நபர் சென்று விட்டார். பின்னர் 1/2 மணி நேரம் கழித்து இரவு 8 மணிக்கு மீண்டும் ஒருவர் வந்து காலிங்பெல்லை அழுத்தி சுஜாதா இருக்கிறாரா? என்று கேட்டார். அப்படி யாரும் இல்லை என்று சொன்னதும் தெரியாமல் வந்து விட்டேன் என்று கூறி போய் விட்டார்.

இவர்கள் நடமாட்டம் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனது குடும்பத்துக்கு இவர்களால் ஆபத்து நேருமோ என அஞ்சுகிறோம். நித்யானந்தா வழக்கில் நான் முக்கிய சாட்சியாக இருக்கிறேன். நித்யானந்தா தவிர வேறு யாரும் எனக்கு எதிரிகள் கிடையாது. அவர்தான் ஆட்களை அனுப்பி இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

எங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஆர்த்திராவ் கூறினார்.

0 Responses to நித்யானந்தாவால் என் உயிருக்கு ஆபத்து: ஆர்த்திராவ் பரபரப்பு புகார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com