TeamGB எனப்படும் இங்கிலாந்து மகளிர் ஹாக்கி அணியின் போட்டியாளரான
'ஹன்னா மெக்லியோட்' தனது திருடப்பட்ட ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம்
மீளக்கிடைத்துள்ளது.
சென்ற புதன்கிழமை லண்டனில் உள்ள இரவு களியாட்ட விடுதிக்கு 'மெக்லியோட்' எனும் ஒலிம்பிக் வீராங்கணையும் 'ரோவெர்' எனும் வீரரும் சென்றிருந்தனர்.
அங்கிருந்து கிளம்பும் போது இவர்கள் தமது வெண்கலப் பதக்கங்களை வைத்திருந்த ஜாக்கெட்டுக்களை கவனிப்பாரற்று விட்டுச் சென்றுள்ளனர். ஒலிம்பிக் பதக்கம் என்றால் சும்மா விடுவார்களா? உடனடியாக இரு பதக்கங்களும் காணாமல் போனது அவ்வளவு தான். கஷ்டப்பட்டு வென்ற ஒலிம்பிக் பதக்கம் இப்படி பறிபோய்விட்டதே என கவலையுடன் டுவிட்டரில் தேம்பித்தேம்பி அழத்தொடங்கியார் மெக்லியோட் எனும் அப்பெண் வீராங்கணை.
ஆனால் திருட மனமில்லாயல் யாரோ ஒருவர் வெண்கலப் பதக்கத்தை இங்கிலாந்து ஹாக்கி தலைமை அலுவலகத்தின் முகவரிக்கு அஞ்சலில் அனுப்பியுள்ளார். அந்த புண்ணியவான் எங்கிருந்தாலும் வாழ்க என கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்கிறார் மெல்லியோட்.
ஆனால் மற்றைய வீரரான ரோவரின் வெண்கல பதக்கம் கிடைக்கவில்லை. அவருக்கு கிடைத்தது அவரது ஜாக்கெட் மட்டும் தான். அது வடமேற்கு இலண்டனில் உள்ள போலிஸ் நிலையத்தில் கையளிக்கப் பட்டுள்ளது. உடனடியாக இப்பதக்கத்தை மீள ஒப்படைக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

0 Responses to திருடப்பட்ட ஒலிம்பிக் வெண்கல பதக்கங்களில் ஒன்று மீட்பு : மற்றையது?