மனிதஉரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம்
நீதியைப் பெற்றுக் கொடுப்பது சாத்தியமில்லை என்று ஜெனிவாவைத் தளமாகக்
கொண்டு செயற்படும், சட்ட விவகாரங்களைக் கண்காணிக்கும் மனிதஉரிமை அமைப்பான
அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.
உலகில் முக்கியமான 60 நீதியாளர்கள் மற்றும் சட்டவாளர்கள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள 150 பக்க அறிக்கையில், சிறிலங்காவில் நீதிச்சேவை மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும், நீதிச் சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிரதானமான மனிதஉரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர்தப்பியோருக்கு நீதி கிடைப்பதில்லை, குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவதில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் 2009இல் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரில், இருதரப்பினாலும் இழைக்கப்பட்ட தீவிரமான அனைத்துலக சட்டமீறல்களால் பாதிக்கப்படவர்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என்று உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருந்து எழுப்பப்பட்ட கோரிக்கைகளை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தவிர்க்க முயன்று வருகிறது என்றும் இந்த அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது.
ஜெனிவாவில் சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அமர்வு இன்று இடம்பெறவுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
இது சிறிலங்கா அரசுக்கு ஜெனிவா அமர்வில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

0 Responses to சிறிலங்கா மீது தருணம் பார்த்து அடித்தது அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழு