1988ம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும், ராஜீவ் காந்திக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இலங்கை உடன்படிக்கையின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்படக் கூடிய வரி வருமான இழப்பினை ஈடு செய்யும் நோக்கில் இவ்வாறு இந்திய மத்திய அரசாங்கம் மாதாந்தம் ஐந்து மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளது. 1988ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் திகதி இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால், வொஷிங்டனுக்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஜூலை மாத இறுதியில் பணம் கொடுக்கப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலய உயர் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இடைக்கால நிர்வாக சபையில் இணைந்து கொள்வதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்தே இந்த பணம் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டதாக புலிகளின் பேச்சாளர் ஒருவர் இந்தியாவில் வைத்து குறிப்பிட்டுள்ளார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
0 Responses to ராஜீவ் காந்தியின் அரசினால், வி.புலிகளுக்கு ரூ 580 மில்லியன் வழங்கப்பட்டது?