இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக சிறப்பான நினைவுத்தூபி அமைக்கப்பட்டு அஞ்சலியும் வீரவணக்கமும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு பல நூற்றுக்கணக்கான மக்கள் எழுச்சியுடன் வருகை தந்து முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கும் தமது வணக்கத்தைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வானது பொதுச்சுடரேற்றம், தேசியக்கொடியேற்றம், ஈகச்சுடரேற்றம், அகவணக்கம், மலர்வணக்கம் போன்றவற்றுடன் ஆரம்பமாகியது. இங்கு வருகை தந்திருந்த மக்கள் அனைவரும் மாவீரர்களுக்காகவும் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும் சிறப்பாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் அவர்களுக்கு சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து எழுச்சிகானங்கள், சிறப்புரை, உரை, முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுபடுத்தும் கவிதைகள், எழுச்சி நடனங்கள், காட்சியும் கானமும், நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் இசைக்கவிடப்பட்டு தேசியக்கொடி இறக்கத்துடன் இந்நிகழ்வு நிறைவடைந்தது.
0 Responses to முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவுநாள் 2013 - டென்மார்க் (படங்கள் இணைப்பு)