Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தத்துவாசிரியருமான தமிழீழ "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று லண்டனில் நடைபெற்றது.

தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டில் நோர்த் வெம்பிளி பகுதியில் நேற்று மாலை 4:00 மணியளவில் பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தைச் சேர்ந்த திரு.ஜேம்ஸ் அவர்களின் தலைமையில் ஆரம்பமான வணக்க நிகழ்வில் பொதுச் சுடரினை நீண்டகால தேசிய செயற்பாட்டாளர் திரு.பரணி அவர்கள் ஏற்றிவைத்தார்,

அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட வரலாற்றில் இன்று வரை வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும், மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், போராட்டத்தின் பால் எதிரிகளால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும், சிறீலங்கா கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழக மக்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவீரரின் சகோதரரும் நீண்டகால தேசிய செயற்பாட்டாளருமான திரு. குமார் அவர்கள் மலர் மாலை அணிவித்து, தீபம் ஏற்றி மலர்வணக்க நிகழ்வை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து, வணக்க நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைவரும் தீபம் ஏற்றி மலர்வணக்கம் செய்தனர்.

பிரித்தானியாவில் பாலா அண்ணா அவர்களுடன் நீண்ட காலமாக இணைந்து பணியாற்றிய திரு.ஜெயம் அவர்கள் பாலா அண்ணா தொடர்பான நினைவுரை வழங்கியிருந்தார்,
இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு தமது வணக்கத்தை செலுத்தியிருந்தனர்.

தமிழீழ தேசத்தின் விடுதலைப் போராட வரலாற்றில் தனக்கென தனியான ஒரு இடத்தை அமைத்து சர்வதேச அரசியல் சட்டங்களுக்கு அமைவாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்தி அதன் ஊடாக தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் உண்மையான நிலைப்பாட்டினையும், அதன் நியாயத் தன்மையையும் உலக அரங்கில் ஒவ்வொரு நாடுகளின் நிலைப்பாட்டிற்கு ஏற்ற வகையில் எடுத்துரைத்த இராஜதந்திரியாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இன்று அவரை நினைவுகூர்ந்து வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

மாலை 6.30 மணியளவில் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற உறுதி மொழி ஏற்புடன் வணக்க நிகழ்வு நிறைவடைந்தது.

0 Responses to லண்டனில் நடைபெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு‏

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com