தாய் உயிருக்கு ஆபத்து ஏற்படுமாயின் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கும்
சட்டதிருத்தத்தை அயர்லாந்து அரசு உத்தியோகபூர்வமாக
நடைமுறைப்படுத்தியுள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த பிரவீன் ஹாலப்பானவர் எனும் மருத்துவரும், அவரது மனைவி சவீதாவும் அயர்லாந்தில் கடமையாற்றி வந்தனர். சவிதா 17 வார கர்பமாக இருந்த போது, அவருக்குஎ எற்பட்ட திடீர் வயிற்று வலி, ரத்தப்போக்கை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது வயிற்றில் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக கருக்கலைப்பு செய்ய அனுமதிக்குமாறு பிரவீண் வேண்டுகோள் விடுத்தார். எனினும், அயர்லாந்து மதமுறைப்படி கருக்கலைப்பு பாவமாக கருதப்படுவதுடன், சட்டத்திலும் அதற்கு இடமில்லை என்பதனால், மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.
இதனால், சவிதா உயிரிழக்க நேரிட்டது. இச்சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கருக்கலைப்பு உரிமை வழங்க கோரி மக்கள் நாடு முழுவதும், போராட்டத்தை நடத்தினர். அதன் பயனாக தற்போது இச்சட்டத்தில் திருத்தம் செய்ய அயர்லாந்து அரசு சம்மதித்துள்ளது. கருவால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் கருக்கலைப்பு செய்ய வைத்தியர்களை அனுமதிக்கும் வகையில் சட்டம் மாற்றம் செய்யப்படவுள்ளது. தாயின் நலனை காக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது என அயர்லாந்து நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் ஜேம்ஸ் ரெய்லி தெரிவித்துள்ளார்.
ஒரு வரலாற்று பூர்வமான சட்டதிருத்தம் சவிதான் உயிர்த்தியாகத்துடன் ஏற்பட்டிருப்பதாக அயர்லாந்து மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

0 Responses to தாய்க்கு உயிராபத்து எனில் கருக்கலைப்பு செய்யலாம் : அயர்லாந்தில் புதிய சட்டத் திருத்தம் அமல்