Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் பெண்களை இலக்குவைத்து  இலங்கை இராணுவத்தினர் மேற்கொள்ளும் தொடர் நடவடிக்கையானது தமிழ் மக்கள் மீது திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் ஒரு முறையான தமிழினப் படுகொலையின் தொடர் அம்சமாகவே தோன்றுகிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் இலங்கை அரசனாது தனது இராணுவத்தில் தமிழ் பெண்களை தவறான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றியமை மற்றும் யாழ் பல்கலைக்கழக வளாகத்தின் பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி புகுந்து  இலங்கைப் படையினர் மேற்கொண்ட அத்துமீறல்கள் தொடர்பில் நா.தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகார அமைச்சு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்குறித்த கூற்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைத்தீவில் தமிழர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையொன்றை தமிழர் தாயகத்தில் செயற்பட வைக்க சர்வதேச சமூகம் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள், சிறுவர், முதியோர் விவகார அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் குறித்த அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கையின் முழுவிபரம்:-

ஆசிய மனிதவுரிமைக் கொமிஷன் சமீபத்தில் வெளியிட்ட தனது அறிக்கையொன்றில், இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளிலில் இயங்கிவரும் சுமார் 11 பெண்கள் அமைப்புக்களைக் கொண்ட Women’s Action Network (WAN), எனும் அமைப்பானது  இலங்கை இராணுவம் எவ்வாறு தமிழ் பெண்களை அச்சுறுத்தி இராணுவத்தில் சேர்த்துக்கொண்டார்கள் என்ற விபரம் வெளியிடப்பட்டுள்ளமையை மேற்கோள் காட்டியுள்ளது.

இவர்களில் 21 பெண்கள், க.பொ.த. சாதாரண வகுப்பு வயதினர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பாரதிபுரம் இராணுவ முகாமிலிருந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் நிலவுகிறது. வைத்தியசாலைக்குச் சென்று இப்பெண்களை பார்வையிடுவதற்கு சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராணுவம் அனுமதி மறுத்து வருகிறது. இப் பார்வை மறுப்பு நடவடிக்கைக்கு பெற்றோர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களைக்கூட இராணுவம் விட்டுவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பலவந்தமாக இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட சுமார் 140 பெண்கள் தங்கள் பெற்றோர்களுடனோ, உறவினர்களுடனோ தொடர்புகொள்ள இரண்டு வாரங்களுக்கு மேலாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இராணுவ முகாம்களில் கார்த்திகை 5ம் திகதியிலிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களது கைத்தொலைபேசிகளும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

மாதாந்த சம்பளம் ரூபா 30,000 எனவும், இராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டதனாலும், யுத்தத்தின் பின்னரான வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதனாலும் இப்பெண்கள் வேலைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

யுத்தத்தின் விளைவாக நிர்க்கதிக்கு ஆளாகி நிற்கும் தமிழ்பெண்களை இலக்குவைத்து இராணுவத்தினர் மேற்கொள்ளும் இந்நடவடிக்கையானது, இலங்கை அரசாங்கம் தமிழ்மக்கள் மீது திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் ஒரு முறையான தமிழினப் படுகொலையின் தொடர் அம்சமாகவே தோன்றுகிறது

Women’s Action Network (WAN) அமைப்பின் கூற்றுப்படி, இராணுவ சேவைக்கே இவர்கள் எடுக்கப்படுகின்றனர் என்ற விஷயம் இப்பெண்களுக்கோ அல்லது இவர்கள் குடும்பத்தவர்களுக்கோ அறிவுறுத்தப்படவில்லை.

இது இவ்வாறிருக்க, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இராணுவம் அங்கு தொடர்ந்த வண்ணம் உள்ளனர். யாழ் குடாநாட்டில் குடியியல் நிர்வாகத்தின் சகல பரிமாணங்களிலும் இராணுவத் தலையீடு இருந்து கொண்டிருக்கிறது.

சனநாயக வழிகளிலான ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் இராணுவ பலாத்காரத்தால் நசுக்கப்படுகிறது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் காலவரையற்று, சட்ட நடவடிக்கைகள் எதற்கும் உள்ளாக்கப்படாத நிலையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

இம் மாணவர்கள் விரைவில் விடுதலையாவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையெனவும் இவர்கள் புனர்வாழ்வுக்கு உள்ளாக்கப்படவுள்ளதாகவும், இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கூறியுள்ளார்.

சர்வதேச நெருக்கடிக் குழு, கடந்த வருட இறுதிப் பகுதியில் இலங்கையின் தமிழர் தாயகப் பகுதியில் இலங்கை இராணுவம் குவிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் மக்கள் மத்தியில் ஒரு பாதுகாப்பற்ற பயப்பீதி காணப்படுவதாகவும், குறிப்பாக பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் கட்டவிழ்த்து விடப்படுவதாகவும் ஒரு விபரமான அறிக்கை விடப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே.
மேலும் இக்குழுவானது சிறிலங்கா அரசாங்கத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் - வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்து இராணுவம் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும் என்பது உட்பட பல சிபார்சுகளைக் குறிப்பிட்டிருந்தது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் இவ்வருடம் மார்ச் மாதத்தில் நிறைவேற்றிய 19ஃ2 தீர்மானத்தில் இலங்கை அரசாங்கம் வடக்கு கிழக்கு பகுதிகளை இராணவ சூனியப் பிரதேசமாக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தது.
 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய Hon Bob Rae அவர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ள கீழ்வரும் கருத்தை வரவேற்கிறது. '
பேச்சுரிமைச் சுதந்திரம், கட்டுப்பாடுகளற்ற சுதந்திர சமூகம் என்பவற்றைப் பேணுவதற்கான கனடாவின் கண்காணிப்பு தொடரவேண்டும்.  இலங்கை  புரிந்த மனித உரிமை மீறல்களுக்காக அதனை 'வகைகூறும்' நடவடிக்கைகளுக்கு ஆளாக்கவேண்டும்.'

எனினும், சீர்திருத்தம், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான சர்வதேசத்தின் அழைப்பை, இலங்கை அரசாங்கம் யுத்தம் முடிந்து நான்கு வருடங்களாகியும் தொடர்ந்து உதாசீனம் செய்துவருகிறது.

இலங்கைத்தீவில் தற்சமயம் நிலைமை கட்டுமீறியும், அதனால் பாரிய விலைகளை தமிழர் சமூகம் கொடுத்துக்கொண்டும் வருகின்றது. தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு சர்வதேச சமூகம் குரல் கொடுக்கவேண்டும்.

இலங்கையில் தமிழர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையொன்றை தமிழர் தாயகத்தில் செயற்படவைக்க சர்வதேச சமூகம் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு நா.தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 Response to தமிழினப் படுகொலையின் தொடர்நிலையே தமிழ்பெண்கள் மீதான அத்துமீறல்கள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

  1. aiyo sammy...karunadhi jayalitha mathri arikai veduranka.move ur fuckin ass to da street.y u dint say nething about sampanthan?den dnt eva use our maveerar and our thalivar. Maveerar nall matum odi varuvanga,nadipu thuragi naikal.You people so scared to point the finger at UNN and INDIA dn y u fuking wasting ur time and our time.looks like TGTE and GTF are formed by America and India collaboration. People dOnt trust u guys. Everyday our Akka and Anna getting killed or raped but u guys siting in the hot room and releasing statement. thooooooooooo naikalaaaaa

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com