மாவீரத் தெய்வங்களை நினைவு கூரும் மாதத்தில் மாவீரனாக மரணத்தைத் தழுவிய
கேணல் பரிதி அவர்களின் 45ம் நாள் நிகழ்வில் பிரான்சு தேசத்திடம், ஐரோப்பிய
ஒன்றியத்திடமும் நீதிகேட்டு நடைபெறவுள்ள மாபெரும் அமைதிப்பேரணியும்,
ஒன்றுகூடலும் காலம் 22.12.2012. சனிக்கிழமை 14.00 மணிக்கு.
20.12.2012.
அன்பார்ந்த பிரான்சு வாழ் தமிழீழ மக்களே!
தாயக விடுதலையை உளமார நேசித்து அதற்கு விலையாகத் தனது உயிரைப் புலம்பெயர் மண்ணில் ஈந்தவர் கேணல் பரிதி அவர்கள். எதிரியை நண்பனாகப் பார்க்கும் உள்ளம் கொண்டவராகவும், துன்பப்படும் எம்மக்கள் மீது அக்கறை கொண்டவராகவும், 2009 முள்ளிவாய்க்காலின் பின்னர் சோர்ந்து போயிருந்த எமது மக்களுக்கு ஒரு நம்பிக்கையாகவும், எடுத்துக்காட்டாகவும், தேசியத்தலைவர் வழியில் எல்லோரையும் உறுதியுடன் வழிநடத்திச்சென்று சிங்களத்திற்கோர் சிம்மசொப்பனமாக இருந்தவர் கேணல் பரிதி அவர்கள்.
தமிழினத்தின் ஓர் இயக்கு சக்தியாகவிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாதப்பட்டியலுக்குள் இட்டுச்சென்று வெற்றியடைந்த சிங்கள தேசம் 2009 ம் ஆண்டு சர்வதேசத்தின் துணையுடன் முள்ளிவாய்க்கால் வரை சென்று திட்டமிட்ட தமிழினப்படுகொலையைப் புரிந்து தமிழீழ மக்களின் ஆயுதப்போராட்டத்தை ஒரு முடக்கத்திற்குள் மட்டுமே கொண்டுவர முடிந்தது. ஆனால் சிங்களம் எதிர்பார்த்ததற்கு மாறாகப் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளிலும், தாய்த்தமிழ்நாட்டிலும், தமிழீழ விடுதலைத்தீ இன்னும் வீறுகொண்ட நெருப்பாகவே பற்றியெரிந்து கொண்டேயிருக்கின்றது.
புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழீழ மக்கள் தாம் வாழும் நாடுகளில் அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கமைய சனநாயக வழியில் போராட்டத்தை முன்னெடுத்தனர். தமது இதயக்கோயிலில் வாழும் மாவீரர்களுக்கும், படுகொலை செய்யப்பட்ட எமது மக்களுக்காகவும் நினைவுச்சிலைகள் அமைத்தனர். தமக்கு நீதிகேட்டு மனிதஉரிமைகள் அமைப்பையும், மனிதநேய அமைப்புகளின் கதவுகளைத் தட்டினர். அவர்களும் விழிகளை நிமிர்த்தினர். பூட்டிய கதவுகளுக்குள் அவர்களால் அலசிப்பார்த்த விடயங்களையும், தமிழ்மக்கள் விடயத்தில் தாம்விட்ட தவறுகளையும், அசண்டையீனங்களையும் வெளியே சொல்ல வேண்டிய நிலையினை அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது. இவைகள் சிங்களப் பேரினவாத அரசிற்கும், அதற்கு துணைபோகும் அடிவருடிகளுக்கும் பேரிடியாகவும், பெரும் அவமானத்தையும், சிங்கள அரசஅதிபர் தனது நாட்டை விட்டு எங்குமே செல்ல முடியாததொரு நிலையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பதில் நடவடிக்கையாக தமிழீழ மக்களையும்,
முன்னெடுப்பாளர்களையும் அச்சுறுத்துமோர் நடவடிக்கையாகவே இந்த உயிர் பறிப்பு நடைபெற்றிருக்கின்றது. இந்த படுகொலைக்குக் காரணமானவர் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றில், ஒரு வல்லரசு தேசத்தில் ஒருகுட்டித்தீவான சிங்கள நாடு தனது கொலைக்கரத்தினை நீட்டிவிட்டு அதனையொரு குழுமோதலாகவும், போட்டி மோதலாகவும் சித்தரித்து தப்பித்துக் கொள்ளப்பார்க்கின்றது. சிங்கள தேசத்தின் உண்மைமுகம் உலகத்திற்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.
கொலைக்குற்றவாளி நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். இதனை பிரான்சு நாட்டின் பாதுகாப்பு அமைச்சும், காவல்துறையும், ஐரோப்பிய ஒன்றியமும் மிகுந்த கவனத்தில் எடுத்துக் கொலையாளியை மக்கள் முன் நிறுத்த விரைவு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்கோருவதோடு எதிர்வரும் 22.12.2012 சனிக்கிழமை பி.பகல் 2.00 மணி முதல் 6.00 மணிவரை நடைபெறவிருக்கும் மாபெரும் அமைதிப்பேரணிக்கும், ஒன்று கூடலுக்கும் பிரான்சு வாழ் தமிழீழ மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன் எமக்கு நீதி கிடைக்கும் வரை முன்னெடுக்கப்படும் தொடர்போராட்டங்களில் பங்கு கொண்டு எமது ஒற்றுமையையும், உயர்வையும் சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
“ தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் ’’
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு

0 Responses to தாயக விடுதலைக்கு விலையாகத் தனது உயிரைப் புலம்பெயர் மண்ணில் ஈந்தவர் கேணல் பரிதி அவர்கள்: தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு