Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் குடும்பத்திற்கு சவூதி அரேபிய இளவரசியின் சட்ட ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர் ராஹீத் 10 லட்சம் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளார்.
 
காத்தான்குடிக்கு நேற்று சனிக்கிழமை விஜயம் செய்த சவூதி அரேபிய இளவரசியின் சட்ட ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர் ராஹீத் தனது சொந்த நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாவை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிடம் கையளித்துள்ளார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான இணைப்பாளர் மசூர் மௌலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் மற்றும் காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0 Responses to ரிசானாவின் குடும்பத்திற்கு சவூதி இளவரசியின் சட்ட ஆலோசகர் 10 லட்சம் ரூபா நிதியுதவி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com