Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் நடாத்திவரும் 2013 இற்கான மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 13.01.2013 ஞாயிற்றுக்கிழமை பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான நந்தியார் பிரதேசத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

 ஆரம்பநாள் நிகழ்வில் ஈகைச்சுடரினை 1999 ஆம் ஆண்டு முல்லைத்தீவு இராணுவமுகாம் தாக்குதலில் வீரமரணத்தை தழுவிக்கொண்ட மேஐர் மிதுலாவின் சகோதரி அவர்கள் ஏற்றிவைக்க மாவீரர் கேணல்பரிதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு. சுதர்சன் அவர்கள் ஏற்றிவைத்து அகவணக்கம் செய்யப்பட்டு 13ம் நாள் நடைபெறப்போகும் சதுரங்கம்,கரம் போட்டிகளின் விளக்கங்கள் கொடுக்கப்பட்டு போட்டிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இப்போட்டிகளில் சிறுவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் பெண்கள் கலந்துகொண்டிருந்தனர். போட்டிகள் யாவும் விறுவிறுப்பாக மாலை 6.00 மணிவரை நடைபெற்றன. தொடர்ந்து கூடைபந்தாட்டம்,வலைப்பந்தாட்டம், ஏனைய போட்டிகள் தொடர்ந்துவரும் வாரங்களில் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளன.

0 Responses to பிரான்சில் 2013 இற்கான மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com