Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று தமிழகத்தில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடந்து கொண்டு இருக்கிறது. வீரர்கள் மாடுபிடிக்கும் கொண்டாட்டத்தில் மிக மகிழ்ச்சியாக உள்ளனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர  விளையாட்டாகவும், உலகப் புகழ் பெற்ற வீர  விளையாட்டாகவும் கருதப் படுகிறது. இந்த வீர விளையாட்டில் கலந்து கொள்ள 575 வீரர்கள் விண்ணப்பித்தனர் என்றும் அவர்களில் 486 வீரர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர் என்றும் தெரிகிறது.

மொத்தம் 500 காளைகள் போட்டி களத்தில் போட்டிபோட வந்தன என்றும் இவற்றில், 365 காளைகள் தேர்ந்தெடுக்கப் பட்டன என்பதும் குறிப்பிடத் தக்கது. காளைகள் வாடிவாசல் மூலமாக வெளியே வரும்போது, மஞ்சள் நிற சீருடைகள் அணிந்த மாடுபிடி வீரர்கள், எல்லைக்கோடு வரை மாட்டின் கழுத்தில் தொங்கி சென்றாலே பரிசு என்கிற நிலையில், பல மாடு பிடி வீரர்கள், பீரோ, கட்டில், மின்விசிறி போன்ற பரிசுகளை அள்ளிக்  குவித்து வருகின்றனர்.

அதோடு யாருடைய பிடிக்கும் அடங்காத காளைகளும் பரிசுகளை அள்ளிக் குவித்தவாறு செல்கின்றன. இந்த விளையாட்டு மதியம் வரை நடக்கும் என்று கூறப்படுகிறது. இப்போட்டியை முன்னிட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.

0 Responses to தமிழகத்தில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : வீரர்கள் கொண்டாட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com