Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“என்னால் எழுதப்பட்டு, அண்மையில் சென்;னையில் வெளியிடப்பட்ட பிரபாகரன்- தமிழர் எழுச்சின் வடிவம் என்ற நாலுக்கு புலம்பெயர் தமிழர்கள் வழங்கும் ஆதரவும் வரவேற்பும் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

சுமார் 1200 பக்கங்கள் கொண்ட மேற்படி நூலை உலகின் பல பாகங்களிலிருந்தும் சென்னை வருகின்ற தமிழர்கள் விருப்புடன் வாங்கிச் சென்று படிக்கின்றார்கள்.

பல நாடுகளிலிலும் மேற்படி நூலுக்கு அறிமுக விழாக்கள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன.

கனடாவிலும் மிக விரைவில் அறிமுகவிழா ஒன்றை நடத்த என்னோடு தொடர்புடையவர்கள் மிகவும் ஆவலாக உள்ளார்கள்.
இவ்வாறான செயற்பாடுகள் எனக்கும் எனது சகாக்களுக்கும் மிகுந்த உற்சாகத்தை தருகின்றன.

இவ்வாறு உலகத் தமிழர் பாதுகாப்பு பேரவையின் தலைவரும் ஈழத்தமிழர்களின் அரசியல் விமோசனம் தொடர்பாக மிகுந்த கரிசனையும் கொண்டவருமான திரு பழ. நெடுமாறன் தெரிவித்தார்.

சென்னையில் அவரது அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்னர் தன்னைச் சந்தித்த புலம்பெயர் ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ்நாட்டு வர்த்தகப் பிரமுகர்கள் சிலர் ஆகியோரிடம் கருத்து தெரிவித்தபோதே திரு பழ. நெடுமாறன் தெரிவித்தார்.
அவர் எழுதிய மேற்படி நூலின் பிரதிகள் மிகவும் வேகமாக விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தநேரத்தில் மேற்படி சந்திப்பின்போது,

 கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் தலைமையில், திரு பழ.நெடுமாறன் அவர்களைச் சந்திக்கச் சென்ற மேற்படி குழுவில், சேலம் வர்த்தகப் பிரமுகர் திரு சரவணன், சென்னை வர்த்தகப் பிரமுகர் திரு பிரகாஷ் ராதாகிருஸ்ணன் மற்றும் கனடாவின் வர்த்தகப் பிரமுகர் திரு லோகன் இராசையா ஆகியோர் இருந்தனர்.
மேற்படி குழுவிடம் மிகவும் உற்சாகமாக உரையாடிய திரு பழ. நெடுமாறன் அவர்கள்,

 ஈழத்தமிழர்களின் அரசியல் விடிவு குறித்து தமிழகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் செயற்பட்டு வருகின்ற குழுக்கள் அல்லது அமைப்புக்கள் மிகவும் நிதானமாகவும் வேகமாகவும் செயற்பட வேண்டும் என்று தங்களுக்குள் காணப்படும் உள்ளக முரண்பாடுகளை கலந்துரையாடல்கள் மூலம் களைந்து ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

0 Responses to “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்” நூலுக்கு புலம்பெயர் தமிழர்களின் வரவேற்பு குறித்து மகிழ்ச்சி! பழ. நெடுமாறன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com