Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரான நவநீதம்பிள்ளையை இலங்கை வருவதற்கு அனுமதிக்கக் கூடாது என  இலங்கையின் அரச தலைமையிடம் பல்வேறு தரப்புகள் வலியுறுத்தியுள்ளதாக அரச சார்பு சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
இலங்கையிலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவற்றுடனும் புலிகள் சார்பு புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளைப் பேணிவரும் நவநீதம்பிள்ளையை இலங்கைக்குள் அனுமதிப்பது ஆபத்தான விடயம் என குறித்த தரப்புகள் வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த இணையம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாத மனித உரிமைப் பேரவை அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் அவர் இலங்கை வரவுள்ளனமையானது இலங்கை அரசுக்குப் பல்வேறு பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் எனவும் அரச தலைமையிடம் இந்தத் தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன என்றும் அது தெரிவித்துள்ளது.

0 Responses to நவநீதம்பிள்ளை இலங்கை வர அனுமதிக்கக் கூடாது! போர்க்கொடி தூக்கும் சிங்கள கட்சிகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com