மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் அமைப்புக்கள் தான் காரணம் என இதுவரை
மேற்கொள்ளப்பட்டவை போலியான பிரச்சாரங்கள் என்பது இந்திய உள்துறை அமைச்சர்
சுஷில்குமார் ஷிண்டேயின் கருத்துக்கள் மூலம் வெளிப்பட்டுவிட்டதாக லஷ்கர் ஈ
தொய்பா அமைப்பின் நிறுவனரும், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர்
என கருதப்படுபவருமான ஜமாத் உத்தவா தலைவர் ஹபீஸ் சயீது தெரிவித்துள்ளார்.
பாஜக, ஆர்.எஸ்.எஸ் என்பன தீவிரவாத பயிற்சி முகாம்கள் நடத்துவதாகவும், இந்தியாவில் இடம்பெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களுக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ். தான் காரணம் என விசாரணையில் தெரியவந்ததாகவும் நேற்று ஷிண்டே தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
இந்நிலையில் பாகிஸ்தானில் நிருபர்களை சந்தித்த ஹபீஸ் சயீது, இந்திய அமைப்புக்கள் தான் பாகிஸ்தானில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணம். பாகிஸ்தான் அமைப்புக்களுக்கு எதிராக இந்தியா இதுவரை பிரச்சாரம் மேற்கொண்டுவந்தது. இப்போது உண்மை வெளிப்பட்டுவிட்டது. இந்தியா மும்பை தாக்குதலில் எம்மை தொடுக்க பார்த்தது. ஆனால் கடந்த 5 வருடங்களாக அவர்களால் எமக்கு எதிராக நீதிமன்றத்தில் ஒன்றுமே காண்பிக்க முடியவில்லை. இந்தியாவை தீவரவாத நாடாக ஐ.நவின் பாதுகாப்பு சபை அறிவிக்க, பாகிஸ்தான் அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஷிண்டேவின் கருத்துக்கள், பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புக்களுக்கு சாதகமாக போகிறது என பாஜக எச்சரித்திருந்த நிலையில் சயீதின் இக்கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

0 Responses to இந்தியாவை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும்: ஹபீஸ் சயீது