Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனவரி 9 பாரிஸ் நகரில் மீண்டும் ஒரு அரச பயங்கரவாதம். குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி அமைப்பின் நிறுவன உறுப்பினர் Sakine Cansiz மற்றும் அந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் Fidan Dogan மற்றும் Leyla Soylemez படுகொலை செய்யப்பட்டார்கள்.


 குர்திஸ்தான் மக்களின் விடுதலை போராட்டம் தமிழீழ மக்களின் விடுலை போராட்டம் போல் நிலம், மொழி, கலை, கலாச்சாரம், உரிமை பாதுகாப்பு போராட்டமாகும். நாம் தமிழீழ தாயகத்திற்காக போராடுவது போல் அவர்களும் குர்திஸ்தான் நாட்டின் உருவாக்கதிட்காக போராடுகிறார்கள். அவர்களும் சர்வதேச புவியல் அரசியல் மாற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள். தமிழீழ விடுதலை போராட்டத்தில் உயர்த்த மரியாதையை கொண்டவர்கள், எமது மக்களின் அற்பணிப்பில், எமது போராட்டத்தில் பல வழிகளில் ஒன்றிணைகிறார்கள் .


பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையும், எமது அனைத்து கட்டமைப்புக்களும் பல கட்டங்களில் பல போராட்டங்களில் ஒன்றிணைத்து குர்திஸ்தான் மக்கள் அமைப்புகளுடன் சேர்ந்து போராடியிருக்கிறோம், போராடிக்கொண்டும் இருக்கிறோம்.


படுகொலை செய்யப்பட்டவர்கள் எமது சக போராளிகள். பல வருடங்களாக எம்முடன் பல வேலை திட்டங்களில் இணைத்து செயல்பட்டவர்கள்.
சென்ற நவம்பர் மாதம் எவ்வாறு எமது சகோதரர் பருதி பாரிஸில் கொலை செய்யப்பட்டாரோ, அதே போல் இன்று எமது சகோதர அமைப்பின் முன்று சகோதரி போராளிகளை இழந்தும், எம்மை போல் அவர்களும் தமது விடுதலை உணர்வில் மேலும் உறுதி கொண்டு நிற்கிறார்கள். தமிழீழம் கிடைக்கும் வரை எந்த தடை வந்தாலும் நாம் எழுந்து நிற்போம் என்பது போல் இன்றும் குர்திஸ்தான் மக்கள் எழுந்து நிற்கிறார்கள்.

அவர்கள் சனிகிழமை 12 ஆம் திகதி இந்த படுகொலையை கண்டித்து நடாத்திய போராட்டத்தில் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழர் ஒருங்கிணைப்பு குழு, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, இளையோர் அமைப்பினர், பெண்கள் அமைப்பினர் கலந்து கொண்டு குர்திஸ்தான் போராளிகளுக்கு எமது வீரவணக்கத்தை தெரிவித்து கொண்டதோடு பேசுகையில், மனிதவுரிமை சாசனத்தை எழுதிய நாட்டில் அடுத்தடுத்து இரண்டு அரசியல் கொலைகளில் நான்கு விடுதலை போராளிகள் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.


நாம் அனைவரும் எமது நிலங்களை பாதுகாக்கப் போராடிக்கொண்டிருக்கிறோம். அரச பயங்கரவாதம் இன்று நாடு கடந்தது பிரான்சின் இறையாமையை அவமதிப்பது பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரியவர்களை படுகொலை செய்திருக்கிறது. பிரான்சு அரசு இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தமிழர்களுக்கு, குர்திஸ்தான் மக்களுக்கு தமது நிலங்களில் தம்மை ஆளும் உரிமை அவர்களுக்கு இருக்கிராறது. இது அவர்களின் அடிப்படை உரிமை. அந்த உரிமையை எத்தனை உயிர்கள் விழுந்தாலும், போராட்டம் தொடரும், இதை பிரான்சு, ரசியா , சீனா , அமெரிக்க, பிரித்தானியா போன்ற நாடுகள் தடுக்க முடியாது.


விழுந்த இந்த உயிர்கள் மக்களை தொடர்ந்து எழுச்சி அடையவே செய்வார்கள்.
குர்திஸ்தான் போராளிகளுக்கு எமது வீர வணக்கம்.

- தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு.

0 Responses to குர்திஸ்தான் போராளிகளுக்கு எமது வீர வணக்கம்: தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com