Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாகிஸ்தான் இராணுவத்தால் தலை வெட்டி கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரரின் தலையை கண்டுபிடித்துதரக் கோரி அவரது தாயும் மனைவியும் மேற்கொண்ட காலவரையற்ற உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. உத்திரபிரதேஷ முதல்வர் அகிலேஷ் யாதவ் வழங்கிய உறுதி மொழியின் பின்னரே உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படுகின்றது.காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் கடந்த 8ம் திகதி பாகிஸ்தான் இராணுவத்தினர் இந்திய பகுதியில் ஊடுருவி தாக்குதல் நடத்தினர்.

இதில் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹேம்ராஜ் மற்றும் ம.பி.யை சேர்ந்த சுதாகர் சிங் ஆகியோர் கொல்லப்பட்டனர். அதிலும் ஹேம்ராஜ் தலையை வெட்டி வீசினர். அவரது தலை இதுவரை கிடைக்கவில்லை. ஹேம்ராஜின் தலையை ஒப்படைக்க கோரி அவரது தாய் மீனாதேவி, மனைவி தர்மவதி ஆகியோர் 2 தினங்களுக்கு முன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். தலையை கண்டுபிடித்து ஒப்படைக்கும் வரை உண்ணாவிரதம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர். இது உ.பி.யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் நேற்று ஹேம்ராஜ் வீட்டுக்கு சென்றார். அவருடன் மூத்த அமைச்சர்கள் சிலரும் சென்றனர். ஹேம்ராஜ் குடும்பத்துக்கு மாநில அரசு சார்பாக ரூ.25 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

மேலும் ஹேம்ராஜ் குடும்பத்துக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்ய தயாராக இருப்பதாக அறிவித்தார். மத்திய அரசு சார்பில் ரூ.46 இலட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இராணுவ தளபதி பிக்ரம் சிங் இன்று ஹேம்ராஜ் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் அளிப்பார் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஹேம்ராஜ் குடும்பத்தார் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

0 Responses to தலை வெட்டப்பட்ட இந்திய வீரர் இவர்தான்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com