சென்னையில் இருந்து திருச்சி செல்ல புறப்பட்ட விமானத்தில், திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது. பின்னர் உடனடியாக தரை இறக்கப்பட்டதில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கைய நாயுடு உள்ளிட்ட 48 பேர் ஆபத்துதெதுவுமின்றி, பாதுகாப்பாகத் தரையிறங்கினர்.
இன்று காலை 10.50 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து, திருச்சி செல்ல புறப்பட்ட தனியார் விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரை இறக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை உடனடியாக விமானி கண்டு பிடித்து விமான கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டார். பின்னர் விமானத்தை உடனடியாக தரை இறக்க தேவையான அத்தனை வேலைகளும் துரித கதியில் நடைபெற்றன.
அடுத்து உடனடியாக விமானம் சென்னை விமான நிலையத்தில் சுமார் 11.30 மணிக்கு தரை இறக்கப்பட்டது. பாஜகவின் மூத்த தலைவர் வெங்கைய நாயுடு உள்ளிட்ட 48 பயணிகள் மிக பத்திரமாக விமானத்தில் இருந்து இறக்கப் பட்டு, பயணிகள் பாதுகாப்பு அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் இவர்களை மாற்று விமானத்தில் திருச்சிக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிகிறது.
0 Responses to திருச்சி சென்ற விமானத்தில் திடீர் கோளாறு:வெங்கையா நாயுடு உள்ளிட்ட 48 பேர் பாதுகாப்பாகத் தரையிறங்கினர்!