மும்பை தாக்குதல் பற்றிய தமிழ் திரைப்படம் ஒன்றுக்கு, இரண்டு முறை
தணிக்கை குழு அனுமதி மறுத்த போதும், மறு தணிக்கையில் தடையை விலக்கி அனுமதி
அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை கருவாக வைத்து, கரும்புலி என்கிற படம் உருவாகியிருக்கிறது. இந்த படத்துக்கு முதலில் உயிரெழுத்து என்று பெயர் வைத்துள்ளனர். அந்த பெயரை மாற்றி இப்போது 'கரும்புலி' என்று பெயர் வைத்துள்ளனர். பயம் அறியான் படத்தில் நடித்த மகேஷ் ரத்தன், மவுலி, வர்ஷா கே.பாண்டே மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்தை பரமேஸ்வர் இயக்கியுள்ளார்.
இந்த படம் முடிவடைந்து தணிகைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், பிரச்சனைக்குரிய படம் என்று கூறி தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மறு தணிக்கையிலும் படத்துக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.
தணிக்கை குழுவினர் ஆட்சேபித்தை அடுத்து 3 நிமிட காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டன. சில காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டு, படத்தில் இணைக்கப் பட்டன. அதன் பின்னர் மீண்டும் தணிக்கைக்கு அனுப்பப்பட்ட போது, படத்துக்கு யு ஏ சான்றிதழ் கொடுத்து அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.
இது குறித்து இயக்குனர் பரமேஸ்வர் கூறுகையில், "இந்தியாவில் தீவிரவாதத்தை அரங்கேற்றும் சில வன்முறையாளர்களை ஒரு இந்தியன் எடுக்கும் முடிவுதான் கதை. மும்பைத் தாக்குதல் சம்பவம், சென்னையில் நடப்பதைப் போல கற்பனை செய்து மாற்றப்பட்டு இருக்கிறது.
ஒரு தீவிரவாதி உண்மையான முஸ்லீம் இல்லை, ஒரு உண்மையான முஸ்லீம் தீவிரவாதியாக இருக்க முடியாது, என்கிற கருத்து இந்த படத்தில் சொல்லப்பட்டு உள்ளது. இதனால் தணிக்கை குழுவினரின் அனுமதியை பெற பல நாட்கள் போராட வேண்டியிருந்தது." என்றார்.

0 Responses to மும்பை தாக்குதல் பற்றிய தமிழ் திரைப்படத்துக்கான தடையை விலக்கியது தணிக்கை குழு