இலங்கை அரசை கண்டித்து
கடலூர் மீன் மார்க்கெட்டில் பெண் மீன் வியாபாரிகள் கறுப்பு பேட்ஜ் அணிந்து
மீன் விற்றனர். இலங்கை அரசுக்கு எதிராக தமிழகத்தில் மாணவ- மாணவிகள் மற்றும்
பல்வேறு அமைப்பினர்கள் உண்ணாவிரத போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்த
நிலையில் கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை
கடற்படையினர் சுட்டு கொல்வதை கண்டித்தும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்
குற்றவாளியாக அறிவித்து தண்டனை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை
வலியுறுத்தி கடலூர் மீன் மார்க்கெட்டில் மீன் விற்கும் பெண்கள் இன்று
கறுப்பு பேட்ஜ் அணிந்து மீன்விற்றனர்.
சுமார் 500-க்கும் மேற்பட்ட மீன் விற்கும் பெண்கள் இலங்கை அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கறுப்புபேட்ஜ் அணிந்து இருந்தனர்.
0 Responses to போர் குற்றவாளி ராஜபக்சேவுக்கு தண்டனை வழங்க கோரி கறுப்பு பேட்ஜ் அணிந்து மீன் விற்ற பெண்கள்