Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

 புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அக்கினிப் பரீட்சை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை வெளிப்படுத்திய உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அய்யா அவர்கள் மிகவும் உறுதியாக புலிகள் உயிரோடு உள்ளார்கள் அதன் தலைமை அழிக்கப்பட்டதாக நான் நம்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

புலிகள் அமைப்பு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதேகாசி ஆனந்தன் அய்யா இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்...

புலிகள் இயக்கம் முற்று முழுதாக அழிக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை என்றும்... உயிர்த்தெழுந்து வருவார்களா எனவினவியபோது உயிர்த்தெழுந்து வரவேண்டியதில்லை உயிரோடு இருக்கின்றார்கள் என உறுதிபடத் தெரிவித்தார்.

தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதற்கு எம்மிடம் ஆதாரங்கள் எதுவமு இல்லை என தமிழகத் தலைவர்கள் கூறுகின்றார்களே எனக் கேட்டதற்கு தலைவர் இருக்கின்றார் எனவும் அதனை தான் முழுமையாக நம்புவதாகவும் அதற்கு மேல் எதனையும் கூறவிரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.

ஈழவிடுதலைப் போரானது இந்திய விடுதலைப் போராட்டத்தைவிட மகத்தானது என்று கூறியிருந்தார் காசி ஆனந்தன் அய்யா. நிலப்பரப்பு அடிப்படையிலும் மக்கள் தொகையிலும் மிகப்பெரும் வேறுபாட்டை கொண்டிருக்கும் இந்திய தமிழீழ நாடுகளின் விடுதலைப் போராட்டத்தில் இழக்கப்பட்ட இழப்புகளின் அடிப்படையில் எவ்வாறு இந்திய விடுதலைப் போராட்டத்தைவிட ஈழ விடுதலைப் போராட்டம் மகத்தானது என விளக்கிக் கூறியிருந்தார்.

ஈழவிடுதலைப் போரில் திலீபன் மற்றும் பூபதி அம்மையாரும் உயிரைவிட்டுள்ள நிலையில் அகிம்சைவழிப் போராட்டத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவில் அதற்காக யாரும் உயிரை இழக்கவில்லை.

தமிழீழ விடுதலைப் போராட்டம் மிகப்பெரிய போராட்டம். இப்படிப்பட்ட போராட்டத்தை அந்த மக்கள் ஏன் நடத்துகின்றார்கள். அவர்கள் என்ன திமிர்கொண்டு நடத்துகின்றார்களா.. அவர்களிற்கு ஆசையா.. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களிற்கு காதல் இல்லையா திருமணத்தில் ஆசையில்லையா.. வாழ்க்கை இல்லையா.. அப்படியிருந்தும் போராடினோம்.

எவ்வளவு பெரிய போராட்டம் என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் வெறி கொண்டு போராடவில்லை திமிர் கொண்டு போராடவில்லை தமிழ் வெறிகொண்டு போராடவில்லை தமிழின வெறிகொண்டு போராடவில்லை சிங்களம் ஒழியவேண்டும் என்றோ சிங்களவன் அழியவேண்டும் என்றோ அவர்களது நாடு அழியவேண்டும் என்றோ நாம் ஒருபோதும் போராடியதில்லை.

ஆனால் அவர்கள் தமிழ் அழியவேண்டும் தமிழர்கள் ஒழியவேண்டும் தமிழர்களை கொன்று குவிக்க வேண்டும் என்று வேட்டையாடுகின்றார்கள். இந்த வேறுபாடுகளை உணர்ந்து எமது போராட்டத்திற்கு இந்தியா உதவமுன்வர வேண்டும்.

பெருமைக்காகவோ வீரத்திற்காகவோ அல்லாமல் எமது விடுதலைப் போராட்டம் எவ்வித நாடுகளின் உதவியும் இன்றி முன்னெடுக்கப்பட்டது உண்மை. அதனால்தான் நாம் போராட வேண்டி வந்தது.

அன்று உணவுப்பொட்டலத்தை போட்ட இந்தியா குண்டுகளையும் எமது மக்கள் மீது போட்டது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்தது உணவுப் பொட்டலத்தைதான். நேற்றும்சரி இன்றும்சரி நாளையும்சரி நாங்கள் இந்தியாவை நம்புகின்றோம்.

தமிழீழத்தை சிறுமைப்படுத்தும் இந்திய உள்ளிட்ட உலகநாடுகளின் செயல்களிற்கு கண்டனத்தையும் ஏமாற்றத்தையும் விளக்கிக் கூறியிருந்தார்.

ஈழமண்ணில் நடைபெற்றுவருவது பச்சை இனப்படுகொலை. முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல அதற்கு முன்னரும் அதற்கு பின்னரும் மிக நெடுங்காலமாக தமிழனப்படுகொலை நடைபெற்றுவருகின்றது.

தமிழர்கள் என்பதற்காக மட்டுமல்ல தமிழர்களை ஆதரிக்கின்றார்கள் என்பதற்காக சிங்களவர்களும் அழிக்கப்படுகின்றார்கள்.

அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் ஈழவிடுதலையை கொண்டுவரும் பெரிய வெற்றியாக கொண்டாட முடியாது. அது சிறு அழுத்தத்தை மட்டுமே கொடுக்கும்.

ஈழவிடுதலை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு மாற வேண்டும். முதலில் அதனை தமிழர்களின் தேசிய பிரச்சினையாக பார்க்க வேண்டும். தமிழர்களை ஒரு தேசிய இனமாக பார்க்க வேண்டும். இந்தியாவின் கொள்கைகளில் மாற்றம் வந்தாகவேண்டும்.

சிறிலங்காவின் வான் எல்லைக்குள் சென்று அன்று உணவுப்பொட்டலங்களை போட்டது இறையாண்மையை மீறிய செயல் இல்லையா? தாங்கமுடியாத கொடுமைகள் நடைபெறுகின்றபோது அந்த மண்ணில் அந்த இனம் முழுமையான ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றபோது தலையிட்டு உதவுவதற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் உரிமை உண்டு.

எமது பிரச்சினையில் இந்தியாவிற்கு அந்த பங்கு உண்டு. இன்றும் நாங்கள் காத்திருக்கின்றோம் இந்தியாவின் தலையீட்டிற்காக. நாளையும் காத்திருப்போம்.

நான் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்கின்றேன் எந்தநாடும் எமது விடுதலையை கொண்டுவந்து தரவேண்டும் என கூறியதில்லை. இந்தியா எமது அண்டை நாடு என்ற அடிப்படையில் எமக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இந்தியா உறுதுணையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழீழ விடுதலைப் போர் தொடரும். அதனை உறுதிபடக்கூறுகின்றேன். அதில் எந்த தடுமாற்றமும் கிடையாது.

ஒரு கடைசி ஈழத்தமிழன் இருக்கும்வரை எமது போராட்டம் தொடரும். முள்ளிவாய்காலில் எல்லாம் முடிந்துவிட்டதாக நினைக்கலாம். அந்த மக்கள் போராடுவார்கள். அந்த மக்கள் சிந்தியிருக்கும் உயிர் அந்த மக்கள் கொடுத்திருக்கும் விலை சிறியதல்ல. ஆகவே அந்த மக்கள் தொடர்ந்து போராடுவார்கள்.

உறுதியான நம்பிக்கை எமக்குண்டு. நாங்கள் நிமிர்வோம். அந்த மண்ணில் மீண்டும் நெருப்பு எழும். பழையபடி புயல் வீசும். விடுதலைப் போராட்டம் தொடரும் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்கின்றேன்.

என முடங்கிக் கிடக்கும் தமிழர்களிற்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக நம்பிக்கையான கருத்துக்களை உறுதியான குரலில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அய்யா தெரிவித்துள்ளார்.

3 Responses to விடுதலைப் புலிகள் அழிக்கப்படவில்லை - தமிழீழத்திற்கான போர் தொடரும் - காசி ஆனந்தன் (காணொளி இணைப்பு)

  1. Anna Mikka mahilchi 2014 ill tamil eelam uruthi

     
  2. great words said by kaasi anand sir i respect sir.

     
  3. விடுதலைப் புலிகள் அழிக்கப்படவில்லை - தமிழீழத்திற்கான போர் தொடரும் தொடரும் தொடரும் தொடரும் தொடரும் தொடரும் தொடரும் தொடரும்

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com