Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத்தமிழர்கள் மகிழ்வாக, நிம்மதியாக வாழ தமிழ் ஈழம் தான் தீர்வு. அது நிலைநாட்டப்படும் வரை மத்திய அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து நடத்தும் என அக்கட்சியின் நிறுவன தலைவர் ஆர். சரத்குமார் தெரிவித்தார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை பிரச்சினையில் மாணவ சமுதாயம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பதையும், இலங்கையில் இனியும் ஒரு தமிழனைக்கூட நாம் இழந்துவிடக் கூடாது என்கிற அக்கறையை வெளிப்படுத்தியிருப்பதையும் நான் மனதாரப் பாராட்டி வரவேற்கிறேன்.

மாணவர்கள் போராட்டம் நடத்துவது மட்டுமின்றி தமிழக மக்களிடையே ஈழ ஆதரவு பிரசாரம் செய்து ராஜபக்சேவுக்கு எதிரான விழிப்புணர்வை நம் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
இலங்கை அரசின் இனப்படுகொலையை விட, மத்திய அரசின் மவுனமும், மெத்தனப்போக்கும் இன்னும் பல மடங்கு எரிச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது.

பாராளுமன்றத்தில் பிரதமர் தனது கவலையை வெளிப்படுத்துகிறாரே தவிர, மத்திய அரசின் தீர்க்கமான முடிவை இதுவரை தெரிவிக்கவில்லை.

தமிழின படுகொலை புரிந்த இலங்கை அரசு குற்றவாளி என்பதும், இனியும் ஈழத்தமிழர்கள் மகிழ்வாக, நிம்மதியாக வாழ தமிழ் ஈழம் தான் தீர்வு என்பதும் நிலைநாட்டப்படும் வரை மத்திய அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து நடத்தும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 Responses to ஈழத் தமிழர்கள் நிம்மதியாக வாழ தமிழ் ஈழம் தான் தீர்வு: சரத்குமார் அறிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com