வலிகாமம் வடக்கினில் இலங்கை அரசு வேகமாக முடுக்கி விட்டுள்ள நிலஆக்கிரமிப்பை கண்டித்து தமிழ்தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டமொன்றை யாழ்.மாவட்ட செயலகம் முன்பதாக இன்று நடத்தியுள்ளது.
இன்று காலை பதினொரு மணியளவினில் யாழ்.மாவட்ட செயலகம் முன்பதாக ஒன்று திரண்ட சுமார் நானூறிற்கும் அதிகமான பொதுமக்கள் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தினில் கலந்து கொண்டனர்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் நவசமாஜக்கட்சியினர்இ ஜனநாயக மக்கள் முன்னணியினர் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினரென அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும் இடம்பெயர்ந்த மக்களது நலன்புரி அமைப்புக்களை சேர்ந்தவர்களுமென சுமார் நானூறிற்கும் அதிகமானவர்கள் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தினில் கலந்து கொண்டிருந்தனர்.ஒரு புறம் அனல்வீசும் வெயில் மறுபுறம் துரத்தி துரத்தி படம் பிடிக்கும் இராணுவப்புலனாய்வாளர்களென அனைத்து நெருக்குவாரங்களுக்குள்ளேயும் இடம்பெயர்ந்த மக்களது போராட்டம் நடந்திருந்தது.
இன்று காலை முதல் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்களை சுற்றிவளைத்த படையினர் பிரதான நுழைவாயில்களினில் நிலை கொண்டவாறு எவரையும வெளியே செல்லவிடாது தடைபோட்டிருந்தனர்.இதனால் அச்சங்காரணமாக இடம்பெயர்ந்த பலபொதுமக்களும் முகாம்களுள் முடங்கி கொண்டனர்.அதே போன்று பருத்தித்துறை வீதியின் புத்தூர் சந்தியுட்பட பல வீதிகளினில் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களில் போராட்டத்திற்கு புறப்பட்டு வந்த இடம்பெயர்ந்த மக்கள் திருப்பப்பட்டனர்.
இத்தகைய நெருக்கடிகள் மத்தியிலும் மக்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.சுமார் இருமணிநேரம் நீடித்த கண்டன ஆர்ப்பாட்டத்தினில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம்இ கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ கஜேந்திரன் விக்கிரமபாகு கருணாரட்ணஇ பாக்கியசோதி சரவணமுத்துஇ சட்டத்தரணி பாலகிருஸ்ணன் மற்றும் இடம்பெயர்ந்த மக்களது நலன்புரி அமைப்பு பிரதிநிதிகள் உரையாற்றினர்.
இராணுவமே வெளியேறு!
எங்கள் காணிகளை எமக்கு தா!
இராணுவ முகாம்கள் எமக்கு வேண்டாம்!
ஏன பல கோசங்களால் மாவட்ட செயலக வளவு அதிர்ந்தது.
0 Responses to இராணுவமே எங்கள் மண்ணைவிட்டு வெளியேறு!