Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒரு குடும்பத்தில் ஒரு பைக், ஒரு கார்  மட்டுமே வைத்து இருக்கலாம். அதற்கு மேல் வைத்து கொள்ள வேண்டும் என்றால் வாகன வரி செலுத்த வேண்டும் எனும் புதிய சட்டத்தை அமல் படுத்த கேரள அரசு, தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
கேரள முதல்வர் உம்மன்சாண்டி மாணவர்கள் நடத்திய விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, "கேரளாவில் வாகனங்கள் பெருகி விபத்து நேருவது ஒரு புறம் கவலையளிக்க, சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மறுபுறம் பாரிய சவாலாக திகழ்கிறது. சுற்றுச் சூழல் மாசு படுகிறது. எனவே வாகன பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் கேரள அரசு உள்ளது.

பெரும்பாலான குடும்பங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மோட்டார் பைக்குகள், கார்கள் வைத்து இருக்கிறார்கள். இது மற்றவர்களுக்கும் ஒரு முன் உதாரணமாக அமைந்து விடுகிறது. இனி அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள், மற்றும் கார்கள் வைத்திருப்பவர்கள், தங்கள் வாகனங்களுக்கு வாகன வரி செலுத்த வேண்டும் என்கிற சட்டத்தை அமல்படுத்த அரசு பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் சுற்றுசூழல் மாசு, சாலை நெருக்கடிகள் விபத்துக்கள் போன்றவற்றைத் தவிர்க்க முடியும் என்பது உண்மை." என்று கூறியுள்ளார். 

0 Responses to குடும்பத்தில் ஒரு கார் ஒரு பைக் மட்டுமே வைத்திருக்கலாம் : கேரளா அரசு பரிசீலனை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com