Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்த ஊழலை விசாரித்து வரும் நாடாளுமன்ற கூட்டுக்குழு இன்று கூட உள்ளதாகத் தெரிய வருகிறது.

இன்றையக் கூட்டத்தின் போது, விசாரணை வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் கிடைக்குமா என்பது தெரிய வரும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் பிரதமர் சம்மதம் பெற்ற பின்னரே ஒப்பந்தம் கையெழுத்தானது என்று ஆ.ராசா கூறியிருந்ததை அடுத்து,பிரதமரும் ஆ.ராசாவும் நாடாளுமன்ற கூட்டு குழுமுன்னர் ஆஜராக வேண்டும் என்று, பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா இதுவரை பிரதமருக்கு மூன்று கடிதங்கள் எழுதி விட்டார்.

இன்று கூட்டு குழு கூட உள்ளதால் நேற்றும், இன்று பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்ற கூட்டுக் குழு முன் ஆஜராக வேண்டும் என்று, யஷ்வந்த் சின்ஹா கடிதம் எழுதியுள்ளார். இதில் மறைப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை. எனவே, நன் கூட்டுக்குழு முன் ஆஜராகத் தேவையில்லை என்று பிரதமர் இந்த கடிதங்களுக்கு ஒரு முறை பதில் அளித்து இருந்தார். இனி அதுகூடத் தேவையில்லை என்று நினைத்து மவுனமாகவே இருகிறார்.

இந்நிலையில் விசாரணை வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் பெறுவதற்காக நாடளுமன்றக் கூட்டுக்குழு டெல்லியில் பி சி சாக்கோ தலைமையில் இன்று கூடுகிறது. ஆனால், எளிதாக ஒப்புதல் கிடைக்காது என்றும், இந்த கூட்டத்தில் விவாதங்கள் மற்றும் கடும் அமளி ஏற்படும் என டெல்லி அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.

0 Responses to 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்:நாடாளுமன்ற கூட்டுக்குழு இன்று கூடுகிறது!:வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் கிடைக்குமா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com