ஏழைகளுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்குவோம் என்று கர்நாடக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது காங்கிரஸ்.
கர்நாடகாவில் வருகிற மே 5ம் திகதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அங்கு காங்கிரஸ் தமது தேர்தல் அறிக்கையை நேற்றுதான் வெளியிட்டது. பாஜக கடந்த வாரமே வெளியிட்டு விட்டது என்பதும், அவர்களது தேர்தல் அறிக்கையிலும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்கிற வாக்குறுதி உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.
தேர்தல் அறிக்கைகளை பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ கே அந்தோணி நேற்று வெளியிட்டு பேசினார். அதில் ஏழைகளுக்கு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்கிற வீதம் மாதத்துக்கு 30 கிலோ வழங்கப்படும். மாணவர்களுக்கு இலவச லேப்டாப், அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டம், விவசாயிகளுக்கு ரூபாய் 2 லட்சம் வரை வட்டியில்லாக் கடன், காவிரி, கிருஷ்ணா நதிநீர் பகுதி விவசாயிகளுக்கு நீர்ப்பாசனம் பெற வசதிகள் செய்து கொடுக்கும் திட்டத்துக்கு நிதி உதவி என்று பல அம்சங்களை நேற்று அவர் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டார்.
0 Responses to ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்குவோம் : கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதி!