சீனாவின் ஸிங்ஜியாங் மாகாணத்தில் உரும்பி பிராந்தியத்தில் உள்ள பச்சு எனும் நகரில் ஒரு வீட்டில் ஆயுதங்களுடன் மறைந்திருந்த தீவிரவாதிகளைக் கண்ட சமூகநல காவலர்கள் இது குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவற்துறை தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டனர். இதில் காவற்துறை மற்றும் சமூக நல பணியாளர்களில் 15 பேர் பலியாகினர்.
நிலமையைச் சமாளிக்க முடியாமல் திணறிய காவற்துறை மிக அதிகளவில் சீன இராணுவத்தினரை சம்பவ இடத்தில் குவித்து கடும் சண்டையில் ஈடுபட்டனர். இதில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டதுடன் 8 தீவிரவாதிகள் உயிருடன் பிடிபட்டனர். பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் சீனாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் இப்பகுதியில் முன்னர் பல தடவை ஹான் சீனர்களுக்கும் உயிகுர்ஸ் எனும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் இடையே மோதல்கள் நிகழ்ந்து வந்துள்ளன.
இதில் உச்சக் கட்டமாக 2009 இல் ஸிங்ஜியாங் மாகாணத்தின் தலைநகர் உரும்கியில் நிகந்த தாக்குதல்களில் 200 பொதுமக்கள் கொல்லப் பட்டிருந்தனர்.
0 Responses to சீனாவில் மறைந்திருந்த தீவிரவாதிகள் மீது அதிரடித் தக்குதல் - மிகப்பெரிய சதி முறியடிப்பு