ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று பெல்ஜியம் வாழ் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்பட்டதுடன் நினைவுக் கல்லறை ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
தமிழர் பண்பாட்டு கழகம் - பெல்ஜியம் மற்றும் தமிழ் இளையோர் அமைபினரும் இணைந்து இன்று மதியம் 12.30 மணியளவில் ஆரம்பமானது முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு தினம். இந்நிகழ்வு தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பமானது. எமது தாயாக மண்ணில் எமது நினைவு சின்னங்களையும் எமது மாவீரர்களின் கல்லறைகளையும் அழிக்கும் இலங்கை அரசிற்கு ஒரு சவாலாக புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாக்கும் நினைவு சினங்களின் ஒரு அம்சமாக Antwerpen மாநிலத்தில் தமிழீழ விடுதலைப் போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்களையும் மக்களினதும் நினைவாக நினைவுக் கல்லறை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. போரில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கு தம் இன்னுயிரை ஆகுதியாக்கி மாவீரர்களுக்கும் இங்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, மெழுகு வர்த்திகள் ஏற்றப்பட்டும் மற்றும் மலர்வணக்கம் செலுத்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது . 14:00 மணிக்கு ஆரம்பமான பேரணி தமிழ் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி Antwerpen புதிய நீதிமன்றம் வரை பேரணியாக சென்று நிறைவு பெற்றது .
சுயநிர்ணய உரிமைக்கான எமது அரசியல் போராட்டத்தையும், நீதி கேட்டுப் போராடுவதையும் அதன் இலக்கினை எட்டும்வரை சோர்வின்றி உறுதியுடன் எடுத்துச் செல்வோம். நாம் அனைவரும் ஒற்றுமையாக நின்று ஓரே குரலில் போராடுவோம். வீழ்வது அவமானமல்ல எழுந்திராமல் வீழ்ந்தே கிடப்பதுதான் அவமானம்! சுதந்திர தாகம் கொண்ட மக்களாக எழுச்சியோடு போராடுவோம்! என்று உறுதி மொழி எடுக்கப்பட்டது.
0 Responses to முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு தினம் - பெல்ஜியம் (படங்கள் இணைப்பு)