Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று, பாமக நிறுவனர் ராமதாசுக்கு 8 மணி நேரம் இதய அறுவை சிகிச்சை நடந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் 30ம் திகதி மரக்காணம் கலவரம் தொடர்பாக, வன்முறையைத் தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார் ராமதாஸ். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார், பின்னர் 11ம் திகதி நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார்.

அன்று பிற்பகலே ராமதாஸின் உடல்நில மிகவும் பாதிப்படைந்தது என்றும், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது என்றும் தகவல் தெரிய வருகிறது. உடனடியாக அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 14ம் திகதி ஆஞ்சியோ கிராம் செய்யப்பட்டது. இதை அடுத்து அவருக்கு இதய அறுவை சிகிச்ச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கட்டாய சூழல் உருவானது.

அதன் படி, நேற்று காலை 7 மணி அளவில் அறுவை சிகிச்சிப் பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், 8 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பிற்பகல் 3 மணிக்கு வார்டுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளார் என்றும் தெரிய வருகிறது. உடன் அவரது மகன், மனைவி, மருமகள், ஜி.கே மணி ஆகியோர் உள்ளனர். ராமதாஸ் அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to பாமக நிறுவனர் ராமதாசுக்கு 8 மணி நேர இதய அறுவை சிகிச்சை : மருத்துவமனை தகவல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com