பழம்பெரும் பின்னணி பாடகர் டி எம் எஸ், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.
கடந்த வாரம் திடீரென்று சுவாசக் கோளாறு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் டி எம் எஸ் என்று சொல்லப்படும் டி எம் செளந்திரராஜன். அதற்கு முன்னரே சில நாட்கள் மருத்துவமனையில் சகிச்சை பெற்று வீடு திரும்பிய அவருக்கு மறுபடியும் சுவாசக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மயிலாப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இப்போது பூரண நலமுடன் வீடு திரும்பிய மகிழ்ச்சியில் உள்ளார் செளந்திரராஜன்.
இவரை மருத்துவமனையில் இருந்த போது, சூப்பார் ஸ்ட்ரா ரஜினிகாந்த் சென்று பார்த்து, நலம் விசாரித்துவிட்டு வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அதோடு, தேவர் பிலிம்ஸ் படங்களில் ரஜினிகாந்த் படங்கள் நடித்தால் அவருக்கு ஒரு பாடல் கண்டிப்பாக செளந்திரராஜன் பாடி இருப்பார் என்பது குறிப்பிடத் தக்கது.
டி.ராஜேந்தர் இசையில் ஒருதலை ராகம் படத்தில் 'நூலும் வாலும் இல்லை வானில் பட்டம் விடுவேனா' என்கிற ஒரு பிரபல பாடலையும் செளந்திரராஜன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
0 Responses to பின்னணி பாடகர் டி எம் எஸ் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார்!